Header Ads



சிங்கள ஊடகங்களின், திரிபுப்படுத்தலை மறுக்கிறது UAE

இலங்கையின் சில உள்ளூர் ஊடகங்கள் தமது நாட்டில் மரணிக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அடக்கம் தொடர்பில் வெளியிட்ட செய்திகளை ஐக்கிய அரபு ராச்சியம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய அரபு ராச்சியத்தின் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமாவோரை அடக்கம் செய்யாமல் தகனம் செய்யுமாறு ஐக்கிய அரபு ராச்சியத்தில் உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கையின் சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் மரணமானவர்களின் உடலங்களை சார்ஜாவின் அல் ராஜா பகுதியில் அடக்கம் செய்யவேண்டாம் என்று ஐக்கிய அரபு ராச்சியத்தின் மன்னர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவு, அந்த பகுதியில் போதுமான இடங்கள் இல்லையென்பதை கருத்திற்கொண்டே விடுக்கப்பட்டதாக ஐக்கிய அரபு ராச்சிய தூதரகம் தெரிவித்துள்ளது.

எனினும் சிங்கள ஊடகங்கள் இதனை திரிபுப்படுத்தி ஐக்கிய அரபு ராச்சியத்தில் கொரோனா வைரஸால் மரணித்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்று மன்னர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் தாம் கடும் அதிருப்தியை வெளியிடுவதாக கூறியுள்ள ஐக்கிய அரபு ராச்சிய தூதரகம், இது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டவும் இனவாதத்தை தூண்டவும் மேற்கொள்ளப்படும் முயற்சி என்று குற்றம் சுமத்தியுள்ளது.

5 comments:

  1. உடனடியாக இந்த நாட்டிற்கு வழங்கும் அத்தனை உதவிகளையும் நிறுத்தி முஸ்லிம் அல்லாத தொழிலார்களை திருப்பியனுப்ப வேண்டும். அத்தோடு தெற்காசிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்கிற நடைமுறையை கொண்டுவர வேண்டும்

    ReplyDelete
  2. THUVESHIKAL IRUKKUM VARAI INDA NAADU
    URUPPADAVEI MAATTAATHU.

    ReplyDelete
  3. Hope the current presdent will warn such welknown racist media and black list them for spreading false message.

    This is not the 1st time.. but no government acted against to them till. Srilankan people who love peace... kindly ask president to remove such Media Racist Virus from our land, so that we can unitedly work to prevent Covid-19.

    ReplyDelete
  4. முனாபிக் கழலும் நயவஞ்சகர்களும் என்னென்ன பித்தலாட்டங்களை போடுவார்கள் தெரியுமா

    ReplyDelete
  5. Engada vandi vsndiya eluthurawanuhala kasnom

    ReplyDelete

Powered by Blogger.