Header Ads



சத்துரவின் இனத்துவேஷம், TRP Rating க்காக நடந்த நாடகமா...?

இன்று பரவலாக பேசப்படும் பகிரப்படும் ஒரு விடயம் தான் சத்துர நடாத்திய இந்த நேரடி ஒளிபரப்பு நாடகம். ஆமாம் நாடகம் தான் இதை இவ்வாறு கூறாது எவ்வாறு சொல்வது? நான் ஒரு ஒளி பரப்பு நடக்கும் போது எவ்வாறு அந்த காணொளி கற்றலையில் விடப்படுகிறது என்று கூறுகிறேன் பிறகு நீங்களே சொல்லுங்கள் இது நாடகமா இல்லையா என்று. 

1- முதலில் இந்த உரயாடலை ஒரு கமரா மேன் படமெடுத்துக்கொண்டிருப்பார். தொடர்ச்சியாக இந்த கமரா ஒளிப்பதிவிலேயே இருக்கும். அது ஒளிப்பதிவில் இருக்கும் போது ஒரு 4K கமராவில் சிவப்பு நிற LED விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருக்கும். ஒரு வேளை அது சத்துரவின் கண்களில் விலவில்லை என்றாலும்

2- ஒளிப்பதிவாகும் கமரா காட்சிகள் முதன்மை கட்டுப்பாட்டு அறை (Primary Control Room) க்கு காட்சிப்படுத்தப்படும் அங்கு இதை தொடர்ச்சியாக ஒரு தொழினுட்பவியளாலர் அவதானித்துக்கொண்டிருப்பார். இவ்வாறான தவறுதலான சம்பாசனைகள் நடக்கும் போது அவர்தான் விளம்பரங்களை இடையில் சொறுகி விடுவார். ஒரு வேளை அவரும் தூங்கிவிட்டார் எனக்கொள்வோம்

3- Primary Control Room (PCR) காட்சிகள் இறுதிப்படுத்தப்படுவதற்கு Master Control Room (MCR) இற்கு அனுப்பப்படும் அங்கு தொடர்ச்சியக ஒரு தொழினுட்பவியலாளர் அவதானித்துக் கொண்டிருப்பார் அவரே அங்கிருந்து காட்சிகளை வானலைக்கு அனுப்புபவர். 

இப்போது சொல்லுங்கள் இந்த அனைவரினதும் கண்க்ளில் படாமல் இந்த காட்சி ஒளிபரப்பப்படுத்தப்பட்டது எப்படி? ஒரு வேளை இந்தக்காட்சிகளை வேரொருவர் தனது செல்போன் கமராவில் படமெடுத்து லீக் ஆக்கினால் கூட நம்பியிருக்கலாம். ஆனால் அவர்களது செனலில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டதே கேள்விகளை எழுப்பியுள்ளது. இது TRP Rating க்காக செய்யப்பட்ட ஒரு நாடகமா அல்லது இனத்துவேஷத்தை கக்க பயன்படுத்தப்பட்ட கழிவிடமா என தெரியவில்லை. 

ஆகவே எமது முகனூல் வீரர்கள் வாட்சப் வாரியர்கள் தயவு செய்து இதை புரிந்து கொண்டு செயற்படுங்கள்.

Sanfar Anm

3 comments:

  1. Can be. But in another ankle it can be deliberate action to damage his reliability and stabing him back to damage his image.
    I think it could be a melisious action to full stop his media career.

    ReplyDelete
  2. Allah make people blind. He protect Musa Alayhissalam in the custody of Frown, It is from Allah, There’s lot behind we don’t know.

    ReplyDelete
  3. Why are so worrying @Mr unknown

    ReplyDelete

Powered by Blogger.