Header Ads



அறிமுகமானது ஐபோன் SE 2 - அமெரிக்காவில் 399 டொலர்


இந்த ஐபோன் SE 2 அமெரிக்காவில் 399 டாலர்களுக்கு விற்பனைக்கு வரவுள்ளது. ஐபோனுக்கு இது மிகவும் குறைவான விலை என இப்போதே அங்கு இதற்கு ஆதரவு பெருகிவருகிறது.

பல மாதங்களாக `விரைவில் வெளியாகும்' என எதிர்பார்க்கப்பட்டு வந்த இரண்டாம் தலைமுறை ஆப்பிள் ஐபோன் SE இறுதியாக நேற்று ஆப்பிள் அறிமுகம் செய்யப்பட்டது. எந்த ஒரு நிகழ்வும் இல்லாமல் சிம்பிளாக ஓர் அறிக்கையில் அந்த போன் பற்றிய தகவல்களுடன் நேற்று அறிமுகமானது ஐபோன் SE 2. அளவில் சிறிய ஸ்மார்ட்போனை விரும்பும் பயனர்களை இலக்காகக் கொண்ட இந்த மாடல் மற்ற ஐபோன்களைவிட விலையும் குறைவாக இருக்கும்.

இந்த ஐபோன் SE 2 அமெரிக்காவில் 399 டாலர்களுக்கு விற்பனைக்கு வரவுள்ளது. ஐபோனுக்கு இது மிகவும் குறைவான விலை என இப்போதே அங்கு இதற்கு ஆதரவு பெருகிவருகிறது. 

இந்த மொபைல் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 4.7 இன்ச் டிஸ்ப்ளேவுடைய இந்த ஐபோன் SE 2, 64 GB, 128 GB மற்றும் 256 GB ஆகிய ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் கிடைக்கும்.

புதிய ஐபோன் SE 2, கிட்டத்தட்ட ஐபோன் 8 போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் பார்க்க மட்டுமே அப்படி, உள்ளே இருப்பது அனைத்தும் தற்போதைய ஐபோன் 11 சீரிஸில் இருக்கும் அம்சங்கள். அந்த போன்களிலிருந்த அதிவேக A13 பயோனிக் சிப்செட்டில்தான் இதுவும் இயங்கும்.

இதில் பின்புறம், ஒரு கேமராதான். இந்த 12 MP கேமராவும் ஐபோன் 11 சீரிஸில் இருக்கும் மெயின் கேமராவுக்கு நிகரானதுதான். அதாவது குறைந்த விலைக்கு உயர்ரக ஐபோனின் கேமரா பர்ஃபார்மென்ஸ் இதில் இருக்கும். ஆனால், அதில் இருக்கும் மூன்று கேமரா வெரைட்டி இருக்காது.

ஐபோன் SE 2, வயர்லெஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டதுதான் என்றாலும் ஆப்பிள், ஃபாஸ்ட் சார்ஜரை மொபைல் உடன் சேர்ந்து வழங்குவதில்லை. இதை 18W ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யமுடியும், ஆனால், 5W சார்ஜர்தான் இதனுடன் கொடுக்கப்படும். பேட்டரி பற்றிய தகவல்கள் இல்லை. ஆனால், ஒரு நாள் நீடிக்கும் பேட்டரி கொடுக்கப்படும் என நம்பிக்கை அளித்துள்ளது ஆப்பிள்.

No comments

Powered by Blogger.