Header Ads



கொரோனா பாதிப்பிற்கு, முஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள் - RSS தலைவன்


டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தை மையப்படுத்தி மொத்த சமூகத்தையும் குறை சொல்லாதீர்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தில் கலந்துக்கொண்ட சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றதில் அந்தந்த ஊர்களில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று பரவியது.

நோய் தொற்று பரவியது குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஒரு சிலர் செய்த தவறுக்காக மொத்த சமூகத்தையும் குறை சொல்ல முடியாது. மேலும் பாரபட்சம் இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவி செய்யுங்கள் எனவும் கூறினார்.

நாக்பூரில் இருந்து இணையம் மூலம் நடத்தப்பட்ட அக்ஷயதிருத்தியை குறித்து பேசிய மோகன் பகவத், ''130 கோடி இந்தியர்களும் ஒன்றே, நாம் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்''. தப்லீக் ஜமாத் என்ற பெயரை குறிப்பிடாமல் பேசிய மோகன் பகவத், இருந்து சமூகத்தை சேர்ந்த மூத்தவர்களும் முன்வந்து மக்கள் மனதில் உள்ள தவறான புரிதல் குறித்து பேசி புரிய வைக்க முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் பால்கர் சம்பவம் குறித்து பேசிய மோகன் பகவத், கிராமவாசிகள் சட்டத்தை கையில் எடுத்திருக்கக்கூடாது. யாராக இருந்தாலும் ஒருவரை அடித்து கொலை செய்வது தவறு எனவும் குறிப்பிட்டார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

5 comments:

  1. அரபிகள் குடுத்த அடி அப்புடி.
    சங்கிகளும் சமத்துவம் பேசுற அளவுக்கு....

    ReplyDelete
  2. நயவஞ்சகம் கொண்ட இரட்டை வேடம்போடும் கூட்டமே! நீங்கள் எல்லோரும் மனிதர்கள் தானா? RSS தீவிரவாதிகளே! உங்கள் உள்ளங்களுக்கு உள்ளே உள்ளவற்றை எல்லாம் அல்லாஹ் அறிய மாட்டான் என்றா நினைக்கின்றீர்கள். இது உங்கள் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிப்பதற்கு முன் உள்ள நிகழ்ச்சி நிரள்.
    ஆனால் RSS கூட்டத்தினர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! முழு உலக முஸ்லீம்களின் கண்ணீரும் பிரார்த்தனைகளும் உங்கள் கூட்டத்தினறையும் உங்கள் மீடியாக்களையும்,பதவிகளையும் மமதைகளையும்.அழித்துவிடும்.

    ReplyDelete
  3. அடேய் நயவஞ்சக இந்து தீவிரவாதிகளே எதற்கு இந்த இரட்டை வேடம் ?

    ReplyDelete
  4. நன்றி கெட்ட அயோய்க்கியர்கள்

    ReplyDelete

Powered by Blogger.