Header Ads



மட்டக்களப்பு MUBARAK Tex இல் தீ விபத்து - படங்கள்


மட்டக்களப்பு நகர் பகுதியில் அமையப்பெற்ற புடவைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேற்படி புடவைக்கடை மூடப்பட்டிருந்த நிலையில்  இன்று (27.04.2020) காலை 11 மணியவில் ஏற்பட்டு குறித்த தீ விபத்து இடம் பெற்றுள்ளது. 

மேற்படி தீ விபத்து தொடர்பாக தெரிய வருவதாவது,

குறித்த புடவைக்கடையில் இருந்து புகை வருவதனை அவதானித்த எதிரில் உள்ள பலசரக்கு கடை உரிமையாளர் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைத்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர்,மட்டக்களப்பு மாநகர தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளானர்.

இத் தீ விபத்தின் போது புடவைக் கடையின் முதலாவது மாடி முற்று முழுதாக தீப்பற்றி எரிந்துள்ளது. 

No comments

Powered by Blogger.