Header Ads



கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பது முட்டாள்தனமானது - GMOA

(ஆர்.யசி)

கொவிட் 19 கொரோனா வைரஸுடன் மக்களை வாழ அனுமதிக்கும் தருணம் இதுவல்ல. இலங்கையில் இன்னமும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளது.

கொரோனாவுடன் போராடியது போதும் இப்போது கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கும் அனைவரும் முட்டாள்தனமாக மக்களை வழிநடத்தும் நபர்கள் எனவும் அவ்வாறான கருத்துக்களை முன்வைக்கும் சகலரையும் வன்மையாக கண்டிப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சாடுகின்றது.

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த அச்றுத்தல் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் ஜனாதிபதி, அரசங்கம் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய நாட்டில் ஊரடங்கு  தளர்க்கப்படும் என்ற காரணிகளை கூற ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டினை கூறுகையில் அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே இவ்வாறு கூறினார்.

 அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுள்ள சூழலில் வாழ மக்களை வலியுறுத்தி வருகின்ற கருத்துக்களை நாம் அவதானித்த வண்ணமே உள்ளோம். மக்கள் தொடர்ந்தும் இவ்வாறு வீடுகளில் இருக்க முடியாது என்பது உண்மையே, எதிர்காலத்தில் அவர்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்தாக வேண்டும். ஆனால் கொரோனா வைரஸுடன் இணைந்து வாழக்கூடிய நிலையில் இன்றைய சூழல் நாட்டில் நிலவவில்லை. வியட்நாம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தென் கொரியா, தாய்வான் போன்ற நாடுகளில் கொவிட் 19 இன் வீரியம் குறைவடைந்துவிட்டது. அவர்களின் சுகாதார அட்டவணையினை பார்க்கையில் தாக்கம் குறைந்த வண்ணமே செல்கின்றது. அவ்வாறான சூழலில் மக்களை கொரோனா வைரஸ் சூழலிலும் வாழ அனுமதிக்க முடியும்.

ஆனால் இலங்கையின் நிலைமை அவ்வாறு அல்ல. இந்தியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் நிலைமையில் தான் இலங்கையும் உள்ளது. கொரோனா தாக்கம் குறித்த இலங்கையின் அட்டவனையை எடுத்துப்பார்த்தால் அதில் ஏறுவரியாயில் தான் நோய்த்தாக்கம் காட்டுகின்றது. அவ்வாறு இருக்கையில் இலங்கையின் மக்களை கொரோனாவுடன் வாழ அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் அடுத்த வாரங்களில் நிலைமை மிக மோசமானதாக அமையும். இவ்வாறான கருத்துக்களை கூறி மக்களை நெருக்கடிக்குள் தள்ள நினைக்கும் அனைவரும் முட்டாள்கள் என்றே நாம் கூறுவோம். கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என கூறும் நபர்களின் கருத்துக்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

முதலில் நோயாளர்களை கண்டறிய முழுமையான பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நாட்டில் எந்த மூலையிலேனும் ஒரு கொரோனா தொற்றாளர்  இருந்தால் போதுமானது முழு நாடும் நாசமாகிவிடும். அவ்வாறு இருக்கையில் அதிக அளவில் பரிசோதனைகளை முன்னெடுத்து நோயாளர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையே மீண்டும் மீண்டும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

1 comment:

  1. என்ன இது ஆதரித்த நீங்களே இப்போது எதிராக பேசுவது வேடிக்கையாக உள்ளது

    ReplyDelete

Powered by Blogger.