Header Ads



உடல்களை எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் - ஆராய்ந்து உரிய ஏற்பாடுகளை செய்ய GMOA கோரிக்கை


கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது 

Dr அனில் ஜயசிங்ஹ, 
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ,
சுகாதார சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு,
கொழும்பு 10 .
03 04 2020
மதிப்புக்குரிய ஐயா !

கோவிட் 19 தொற்றுக்குள்ளான உடல்களின் இறுதிக்கிரியை முறைகள் சம்பந்தமாக

கோவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளிகளின் உடல்களுக்கான இறுதிக்கிரியை முறைகள் குறித்து அரசாங்க மருத்துவர் சங்கத்தின் பல உறுப்பினர்கள் பிரசன்னத்துடன் ஆராய்ந்துள்ளோம்.

தனிமைப்படுத்தக்கூடிய தொற்றுநோய்கள் சட்டத்தின் படி மேற்படி தொற்றினால் இறந்த நோயாளிகளின் உடல்களை புதைப்பதற்க்கோ அல்லது எரிப்பதற்க்கோ முடியும் என இத்தால் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

மேலே சொல்லப்பட்ட சட்டத்தின்படி மேற்படி நோயினால் இறந்த உடல்கள் குறித்த இறுதித் தீர்மானம் உங்கள் கைகளிலேயே உள்ளது.

மேலும் உலக சுகாதார இஸ்தாபனத்தின் வழிகாட்டல் குறிப்புக்களின்படி இரண்டு வகையான இறுதிக் கிரியை முறைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தங்கள் பொதுச் சுகாதாரம்,நுண்ணுயிரியல்,சட்ட மருத்துவம், சட்டம்,மண்ணியல் பகுப்பாய்வாளர் போன்ற துறை சார் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மிகவும் பொருத்தமான இறுதிக்கிரியை முறையினை கோவிட் 19 இனால் இறக்கும் நோயாளிகளின் விடயத்தில் எடுக்குமாறு அரசாங்க மருத்துவர் சங்கம் இத்தால் தங்களுக்கு சிபாரிசு செய்கிறது.

இப்படிக்கு 
விசுவாசமுள்ள 
Dr ஹரித அலுத்கே 
செயலாளர் 
அரசாங்க மருத்துவர் சங்கம்.



No comments

Powered by Blogger.