Header Ads



கொரோனா தொற்றினை இல்லாதொழிக்க EU 22 மில்லியன் யூரோ நன்கொடை

இலங்கையில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோவினை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, 4 கோடியே 44 லட்சம் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதியினை ஆசிய அபிவிருத்தி வங்கி நேற்று வழங்கியுள்ளது.

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இந்த நிதி செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்காக இந்த நிதி உதவி பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, அவசர மருத்துவ ஒளடதங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப விசேட நிதியத்தில் இருந்து 4 கோடி அமெரிக்க டொலர்கள், சீன வறுமை ஒழிப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு நிதியத்தில் இருந்து 20 லட்சம் அமெரிக்க டொலர்கள் மற்றும் கொரிய ஈ-ஆசியா பங்காளர் நிதியத்தில் இருந்து பெறப்பட்ட 20 லட்சம் அமெரிக்க டொலர்கள் என்பன இந்த நிதியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கடந்த பெப்பிரவரி மாதம் 25 ஆம் திகதி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியுடன் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள 4 கோடியே 44 லட்சம் அமெரிக்க டொலர் நிதியுடன் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.