Header Ads



இலங்கையில் ரமழான் தலை பிறை தென்படவில்லை - சனிக்கிழமையே புனித நோன்பு ஆரம்பம்


புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்ல் எங்கும் தென்படாததன் காரணமாக, நோன்பு நாளை மறுதினம் (25) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (23) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1441 இற்கான புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததன் காரணமாக, ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்யவும்,  புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் ஏப்ரல் 25 ஆம் திகதி ஆரம்பிக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன உத்தியோகபூர்வமாக கூட்டாக இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளன.

1 comment:

  1. இலங்கையில் எப்போதாவது முதல்பிறை தென்பட்டதுண்டா? அவர்கள் இண்டாம்பிறையைதான் முதல்பிறையாக பார்பார்கள் சந்தோசம் அடைவார்கள்

    *முதல் பிறையை தேடி கஸ்டப்பட்டு யாராவது கண்டாலும் அவனை பைத்தியகாரனாக ஆக்கிவிடுவார்கள் இந்த பிறை கொமிட்டியில் உள்ள சில ஆசாமிகள்

    இன்று வெள்ளிக்கழமை உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு மக்களும் நோன்பு நோட்டுள்ளார்கள் ஆனால் இலங்கையில் மட்டும் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டார்கள்!

    ReplyDelete

Powered by Blogger.