Header Ads



ஆடு, கோழிகளை பிடித்துவந்த முதலை - பிரதேச மக்கள் மடக்கிப்பிடிப்பு


மட்டக்களப்பு, பாலமீன்மடு தண்ணிக்கிணற்றடி பகுதியில், இன்று (15) காலை, குடியிருப்பொன்றுக்குள் புகுந்த முதலையால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதேச மக்கள் இணைந்து முதலையை மடக்கிப்பிடித்து,  வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த முதலை, மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து ஆடு,கோழிகளை பிடித்துவந்த நிலையில், இன்று அதிகாலை மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முதலைகள் இவ்வாறு பிரதேசத்தில் ஊர்ந்துத் திரிவதாகவும் ஒன்று பிடிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றையதையும் பிடிக்க நடவடிக்கையெடுக்கப்படும் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

குறித்த முதலையானது சுமார் 07அடி நீளம் கொண்டது என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

 வனஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி கே.சுரேஸ் தலைமையிலான குழுவினர், குறித்த முதலையினை மீட்டு பாதுகாப்பாக நீர்நிலைக்கு கொண்டுசென்று விடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். 

வா.கிருஸ்ணா

No comments

Powered by Blogger.