Header Ads



ஊரடங்கு சட்டத்தினாலும், கொரோனாவினாலும் கொழும்பில் உருவான மாற்றம்


பரவுவதைத் தடுக்கும் நோக்கில், நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு நகரில் காற்று மற்றும் நீர் மாசு குறைவடைந்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் தரக்குறியீட்டிற்கமைய இன்று மாலை 4 மணியளவில் கொழும்பு நகரின் காற்றின் தரம் 55 வரை உயர்வடைந்துள்ளது.

வாகனப் போக்குவரத்து குறைவடைந்தமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் H.S.பிரேமசிறி தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னரான நிலையுடன் ஒப்பிடுகையில் வளி மாசடைவு பாரியளவில் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் காற்று மாசு கடந்த நவம்பர் மாதத்தில் பாரியளவில் அதிகரித்துக் காணப்பட்டது.

இதேவேளை, தொழிற்சாலைக் கழிவு நீர் வௌியேற்றம் நிறுத்தப்பட்டதால், களனி கங்கை நீரின் தன்மையும் சிறந்த நிலையை அடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அண்மையில் தெரிவித்தது.

No comments

Powered by Blogger.