Header Ads



லண்டன் ஊடகத்திற்கு, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பதிலடி

(நா.தனுஜா)

நடைபெறுவது வேறுபட்ட அரசியல் அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு இடையிலான பூகோளப்போர் அல்ல.  மாறாக இது மனிதர்களுக்கும் வைரஸிற்கும் இடையிலான போராகும் என்று சீனா சுட்டிக்காட்டியிருக்கிறது.

மேலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாவிடின் அவரவர் சொந்த நாட்டிலேயே மேலும் பலர் மரணிப்பதைக் காணவேண்டியிருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது.

லண்டனை தளமாகக் கொண்டியங்கும் 'த எகொடொமிஸ்ட்' என்ற ஊடகம் கடந்த 16 ஆம் திகதிக்குரிய நாளிதழில் 'சீனா வெல்கிறதா? - கொவிட் - 19 இன் பூகோள அரசியல் காரணிகள்' என்பதை அதன் முதற்பக்கத்தலைப்பாகப் பிரசுரித்திருக்கிறது.

இந்நிலையில் இன்றைய தினம் இது குறித்து அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகம், பின்வருமாறு பதிவிட்டிருக்கிறது:

இந்த நாளிதழின் முதற்பக்கமும், தலைப்பும் முற்றிலும் மனிதாபிமானமற்றவையாகும். இந்த மனநிலை மிகவும் தவறானது.

இது வேறுபட்ட அரசியல் அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு இடையிலான பூகோளப்போர் அல்ல. மாறாக இது மனிதர்களுக்கும் வைரஸிற்கும் இடையிலான போராகும். இதனைப் புரிந்துகொள்ள முடியாவிடின் அவர்களது சொந்த நாட்டிலேயே மேலும் பலர் மரணிப்பதைக் காணவேண்டியிருக்கும்'.

1 comment:

  1. This is the same news we can tell to racist media in Srilanka

    ReplyDelete

Powered by Blogger.