Header Ads



கொரோனாவுடன் பரவும் முஸ்லீம் விரோத, சதியை எவ்வாறு முறியடிப்பது ?

- எம் .எஸ் .அமீர் ஹுசைன் -

மார்ச் மாதம் 15 ஆம் திகதி இலங்கையில் கொரோனா பற்றிய செய்திகள் பரவ ஆரம்பித்ததும் எண்ணிக்கை 80 ஆகும் வரையில் அமைதியாகவே நிலைமைகள் நகர்ந்து கொண்டிருந்தன . அதன் பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளான முஸ்லீம் ஒருவரின் தகவல் வெளியாகிய வுடன் அதுவரையில் அமைதியாக இருந்த இனவாத சக்திகள் கொரோனா மூலம் முஸ்லீம் விரோத நடவடிக்கைகளை ஆரம்பித்தனர் .

இப்போது முழுமையாக கொரோனாவை முஸ்லீம் விரோத நடவடிக்கைகளுக்காக திட்ட மிட்ட அடிப்படையில் கையாண்டு வருகின்றார்கள் . எல்லா நிலைமைகளில் முஸ்லிம்களே தொடர்பு படுத்தப்பட்டு குற்றவாளிகளாக காட்டப்படுகின்றார்கள் . நாம் அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கவில்லை , அரசாங்க கட்டளைகளை மீறும் சமூகம் என்றெல்லாம் சமூக ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது . 

கொரோன என்பது இத்தாலியில் இருந்தும் தம்பதிவயிலும் இருந்து வந்தவர்களால் கூடவே கொண்டுவரப்பட்டது என்பது அவர்களுக்கு இப்போ நினைவில் இல்லை, பொதுமக்கள் அபிப்பிராயத்தை கட்டி எழுப்புகின்ற இடங்களில் இருக்கும் அதிகாரிகள் முஸ்லீம் அல்லாதவர்களாக இருப்பதால் இப்படியான பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கும் . சமூக ஊடகங்களில் உலா வருபவர்களாலேயே இந்த பிரச்சினை ஏட்பட்டிருக்கின்றது . இருந்தாலும் இதனை சரியாக நாங்கள் புரிந்து விவேகமாக நடந்து கொள்ள வேண்டும்,

கொரோனா தோற்றால் மரணமடைந்த ஜனாஸாக்களை நெருப்பில் எரிக்காமல் அடக்கம் செய்ய கேட்டதோடு இந்த எதிர்ப்பலைகள் உக்கிரமடைந்துள்ளன . ஏற்கனவெ 2011 ஆம் ஆண்டு முதல் அரங்கேறி உள்ள முஸ்லீம் விரோத செயட்பாட்டின் அடுத்த கட்டமாக இது நடக்கின்றதை அவதானிக்க முடிகின்றது . அந்த எதிர்ப்பலைகளை உருவாக்கியவர்களின் வழித்தோன்றல்களே இந்த எதிர்ப்பையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இருந்தாலும்  எமது சமூகத்தாலும் சில தவறுகள் நடந்ததால் இந்த முஸ்லீம் விரோத சக்திகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது என்றே கூற வேண்டும் . நாம் அவதானமாகவும் விவேகமாகவும் நடந்திருந்தால் இந்த நிலைமைகள் உருவாகி இருக்காது .

இனி செய்ய வேண்டியது இவ்வாறு பேரினவாத சிங்கள மக்கள் இந்த விடயத்தில் எண்கள் மீது குற்றம் சாட்ட வழிவகுத்த காரணிகள் யாவை ? இந்த சவால்களை எவ்வாறு வெற்றிகொள்வது ? அதட்கான வழிமுறைகள் என்ன ? என்பது பற்றி சிந்தித்து கருமமாற்றுவதாகும் .

ஏற்கனவே அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா தொழுகைகளை நிறுத்தி பள்ளிகளை மூடி மக்கள் ஓன்று சேருவதை கட்டுப்படுத்த உத்தரவு வழங்கியது . அந்த கட்டளைகள் கூட சில அதீத வேகம் கொண்ட இஸ்லாமிய வாதிகளால் மீறப்பட்டதோடு உதாசீனமும் செய்யப்பட்டது . இது முதலாவது கட்டமாகும் .

கொரோனவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் விடுத்த அறிவுரைகள் , கட்டளைகள் , வழிகாட்டல்களை சிலர் மீறி நடந்து கொண்டமை இரண்டாவது தவறிழைத்த சந்தர்ப்பமாகும் . இதுவே புத்தளம் , அக்குறணை பகுதிகள் ளொக்டௌன் ஆக காரணமாகும் . எமது சமூகம் பொதுவாக அறிவுரைகளை பின்பற்றுவது , அரசாங்க அதிகாரிகளுடன் ஒத்துழைப்பது என்ற விடயத்துல எப்பவும் ஒரு பிற்போக்கு நிலைமை இருந்து வருகின்றது . கொரோனா விடயத்துலயும் நடந்தது அதுதான் .
அதனால் இந்த கொரோனா என்ற விடயம் அரசாங்கத்துக்கு மட்டும் உரியதல்ல என்பதை நாங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் . நோய் எண்டால் அது இன, மத , மொழி பேதங்களுக்கு அப்பால் இருந்து எல்லோரையும் தோற்றும் ஒன்றாகும் . மரணத்துக்கும் இன  , மத , மொழி , பிரதேச வேறுபாடு என்பது இல்லை . எல்லோரையும் தொற்றக்கூடியதே மரணமும்
எமது பொறுப்பு 
எல்லா ஊர்களிலும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருப்பது அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகர் பி.எச்.ஐ . ஆவார் . அத்துடன் மக்கள் விழியில் நடமாடுவது , ஓன்று கூடுவதை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது அந்தந்த பிரதேச போலீசார் ஆவர் . 

இந்த இரண்டு தரப்பினருக்கும் அவர்களது வேலைகளை சரியாக செய்ய நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினால் பிரச்சினை ஏட்படாது  . குறிப்பாக கொரோன பரிசோதனை எண்டு வீடுகளுக்கு வந்தால் அதட்கு இடமளிப்பது , அவர்களோடு அழகாக உரையாடி தேவையான தகவல்களை பரிமாறுவது முக்கியமாகும் . அவர்களது கடமைகளுக்கு இடையூறு ஏட்படுத்தாம நடப்பது மிகவும் முக்கியம் .

அதே போன்று நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசாங்க  ஆஸ்பத்திக்கு சென்று சிகிச்சை பெறுவது , உண்மையான தகவல்களை வழங்குவது , எதையும் மறைக்காமல் இந்த விடயத்துல வெளிப்படையா நடந்து கொள்ளவது முக்கியமாகும்  அத்ததுடன் வெளி ஊர்களில் இருந்து உங்களது பகுதிக்குள் யாரும் வந்தால் அவர்களை பொது சுகாதார அதிகாரிக்கு அறிவித்து 14  நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைப்பது முக்கியமாகும் . 

அண்மையில் ஆங்காங்கே நடந்தது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பொறுப்புடன் நடந்து கொள்வது . முஸ்லீம் சமூகத்துல குறிப்பா அரசாங்க அதிகாரிகள் வீட்டுக்கு வந்தால் அவர்களின் அன்பாகவும் இனிமையாகவும் உரையாடும் பண்பு மிகவும் குறைவாகும் . இது சில சந்தர்ப்பங்களில்  முஸ்லீம் வீடுகளில் பெண்கள் ஆண்கள் குறித்து கொண்டுள்ள அச்சம் , வெட்க சுபாவம், மொழி தெரியாமை காரணமாக நடக்கும் குறைபாடாகும் . 

இதனால் வீடுகளுக்கு வரும் அந்நிய சமூக அதிகாரிகளுக்கு சில நேரங்களில் எங்களைப்பற்றிய நல்லெண்ணம் இல்லை . சிலர் அதிகாரிகள் என்றும் பார்க்காமல் கீழ்த்தரமாக நடத்தும் சந்தர்ப்பங்களும் உள்ளன. இந்த அதிகாரிகள் தான் எங்களுக்கும் ஏனைய்யா சமூகத்துக்கும் இடையில் உறவுப்பாலமாக இருப்பவர்கள் என்பதை நாங்கள் மறந்து விட கூடாது .

இது வீட்டுக்கு வரும் அதிகாரிகளை மட்டும் அல்லாது அன்றாட வியாபாரம் மற்றும் ஏனைய்யா நடவடிக்கைகளிலும் இடம்பெறனும் . அப்போதே அவர்கள் எங் களைப்பற்றி நல்லெண்ணம் கொள்ளும் நிலைமைகள் உருவாகும் . நாம் இந்த நாட்டில் 1200 வருடங்களாக வாழும் சமூகமாக இருந்தாலும் இந்த தூர நோக்கம் கொண்ட தொடர்பாடல் எம் சமூகத்துல இன்னும் வளர வில்லை.

இந்த கொரோனா பரவும்  சூழ்நிலையிலும் எமது சமூகத்தின் தூர நோக்கம் இல்லாத சில பிற்போக்கு செயட்பாடுகளே எங்களை ஏனைய்யா சமூகத்தவர் மத்தியில் மோசமாக சித்தரித்து காட்டும் நிலைமைகளுக்கு காரணமாகின்றது .அதனால் ஒரு பிரச்சினை உருவாக்க வழி வகுத்த காரணிகளை சரியாக அடையாளம் கண்டு இனி அந்த தவறுகள் நடக்காமல் அவதானமாக நடந்து கொள்வதால் முன்னோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் .
முஸ்லீம் என்று சொல்லிக்கொண்டு வேறு மதத்தை மட்டும் கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்த காலம் போயிவிட்டது . ஏனைய்யா சமூகங்களோடு ஒத்துப்போகும் நிலை பலமடையா வேண்டும் . பிரச்சினைகள் வந்தால் நிவாரணம் வேண்டும் வேறு தேவைகள் வேண்டும் கோடிக்கணக்கில் பணத்தை மட்டும் வாரி இறைத்தால் அல்லது அவர்களது காலடியில் கொட்டினால் எதுவும் நடக்கப் போவதில்லை . அதை சாப்பிட்டுவிட்டு அல்லது அதிகாரிகள் விழுங்கிவிட்டு மாரு கணமே மறந்து விடுவார்கள் .

எல்லாவற்றுக்கும் மேலாக பலமான சமூக உறவும் பொது விடயங்கள் வாழ்க்கையில் ஒத்துழைப்பும் அவசரமாக தேவைப்படுகின்றது . வெற்றிகரமான பொது சனா தொடர்பாடல் எம் சமூக ஆண்களிடமும் பெண்களிடமும் வெளிப்பட வேண்டும் . ஊடகம் உலகில் மூன்றாவது கண்களாக மாறி இருக்கின்ற நிலையில் உலகிட்கு எதையும் மறைக்க முடியாது .

ஆனாலும் எந்த சமூகமும், மனித இனமும் குறை இல்லாத பூரணத்துவம் கொண்ட சமூகமாக இல்லை . அனால் இயன்ற வரையில் அரச வழிகாட்டல்கள் , கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பது அவசியமாகின்றது . யாரும் எண்கள் மீது விறல் நீட்டி பகிரங்கமாக விமர்சிக்கும் நிலை வரக்கூடாது . இதுவே இண்ட்ராய்ய்ய நவீன கால முன்னேற்றகரமான சம்மோகம் , மதக்குழு ஒன்றின் பண்பாக வெளிப்பட வேண்டும் .

2 comments:

  1. இனி வரும் தேர்தல் முஸ்லிம்,கொரோனா இரண்டையும் வைத்து மிகப் பெரும் வேகத்துடன் நகரும்.ஆனால் பெரும்பாண்மை மக்கள் இவ்வளவு முட்டாள்கலாக,பொது அறிவு இல்லாதவர்கலாக இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

    ReplyDelete
  2. சமூகத்தின் உண்மை நிலையை அலசி,சரியான வழிகாட்டலை வழங்கும் இந்த கட்டுரையில் அதுவும் பல வருடங்கள் அனுபவம் கொண்ட பத்திரிகைத்துறை சார்ந்த அனுபவமிக்க ஒரு கட்டுரையாசிரியரின் ஆக்கத்தில் அதிகமான எழுத்துப் பிழைகளும் வாக்கியப்பிழைகளும் காணப்படுவது உண்மையில் மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது. ஏனைய என்ற வசனம் பல இடங்களில் ஏனைய்யா எனவும் ஏற்கனவெ,அதட்கான போன்ற பதங்கள் ஒருபோதும் கட்டுரையாசிரியரின் எழுத்துப் பிழைகளாக இருக்க முடியாது. சிலவேளைகளில் பழைய எழுத்துக்கள், யுனிகோர்ட் சொற்களில் இணையத்தளம் மூலமாக மாற்றப்படும் போதும் இத்தகைய பிழைகள் ஏற்படலாம். ஆனால் இணையத்தளத்தை நடாத்துபவர்கள் இத்தகைய தவறுகள் ஏற்படாது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது இணையத்தளத்தின் மீதுள்ள நம்பிக்கைத் தன்மையை முற்றாக அழித்துவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.