Header Ads



கொரோனா நீங்கும்வரை, தேர்தலை நடத்தவே முடியாது - மஹிந்த தேசப்பிரிய திட்டவட்டமாக அறிவிப்பு

(ஆர்.யசி)

தேர்தல் திகதி குறித்து விமர்சனங்களை முன்வைக்க முன்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியுமா என்பதே இன்னமும் சந்தேகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த சந்தேகம் நீங்கும் வரையில் தேர்தலை நடத்த மாட்டோம் என்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.

பகுதி பகுதியாக தேர்தலை நடத்த சாத்தியப்பாடுகள் இல்லை, அவ்வாறான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் சகல கட்சிகளின் நிலைப்பாட்டினை ஆராயவேண்டும் எனவும் கூறுகின்றார்.

பொதுத் தேர்தல் குறித்து அரசியல் ரீதியாக முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இன்னமும் உறுதியான நிலைப்பாட்டினை கொண்டிராத நிலையில் அது குறித்து தெளிவுபடுத்துகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவற்றை கூறினார். 

ஆனால் இப்போதைய சூழ்நிலை அவ்வாறு அல்ல. யார் எதிரி என கண்ணுக்கு தெரியவில்லை. தாக்கம் எவ்வாறானது என்பதை கண்டறியவும் முடியாதுள்ளது.

அதுமட்டுமல்ல பாராளுமன்ற தேர்தல் ஒன்றினை நடத்தும் வேளையில் 55 வீதமளவில் வாக்குகள் பதியப்படுவது போதுமானது என கூற முடியாது. குறைந்த பட்சம் 70 வீதமான வாக்குகளையேனும்  மக்கள் பிரயோகித்திருக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை,

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் முதலில் முற்றுமுழுதாக நாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கான வேலைகளை முதலில் முன்னெடுக்கட்டும்.

பின்னர் தேர்தல் குறித்து பார்க்கலாம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுடன் தேர்தலை வைக்க மாட்டோம். சுகாதார அதிகாரிகள் கூறும் வரையில் எமது பக்கம் எந்த தீர்மானமும் எடுக்கப்படாது. ஒரு சிலர் கூறுவதை கேட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ள மாட்டோம் என்றார். 

6 comments:

  1. நீங்க நடத்தாவிட்டால் என்ன சார், எங்கள் அரசாங்கத்துக்கு எல்லா வலிமையும் உண்டு...புள்ளடி இட்ட பெட்டிகளை சரி கொண்டு வந்து நாங்கள் தேர்தலை நடத்தி வென்று காட்டுவோம்...மக்கள் வெளியில் வரவே தேவையில்லையே.... சட்டம் இப்ப எங்கட கையில Mr.Mahinda

    ReplyDelete
  2. What happened to the statement issued by the election commissioner to conduct the election on June 20.
    Who is behind the screen for voice of EC.

    ReplyDelete
  3. ​நேற்றில் இருநது பாராளுமன்றத் தேர்தல் ஜூன் மாதம் 20 தேதி நடைபெறும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்ததாக இணையத்தளங்களிலும் சில டீவிகளிலும் வௌியிடப்பட்டன். அந்த செயதி உண்மையா மேலே தேர்தல் ஆணையாளர் கூறும் செய்தி உண்மையானதா என்பது பொதுமக்களாகிய எமக்கு விளங்கவில்லை. எனவே பொறுப்பானவர்கள் இது பற்றிய உண்மைச் செய்தியை பொதுமக்களுக்கு வௌிப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  4. We are appriciating you sir. Backbone Commissioner.

    ReplyDelete
  5. We are appreciating you sir. Backbone Commissioner.

    ReplyDelete

Powered by Blogger.