Header Ads



கொரோனா கட்டுப்பாடுகள் கட்டாயமாக தொடரப்பட வேண்டும், குறைந்தளவு நேரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்படுவது இடம்பெறக்கூடாது

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கட்டாயமாக தொடரப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதுவருடத்தின் பின்னர் இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவத்துறையின் 6 பேராசிரியர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜனக டி சில்வா, ருகுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் லேகம்வசம், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.எம்.குலரத்ன, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிசிர சிறிபந்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரோஜ் ஜெயசிங்க, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் போராசிரியர் கமனி வணிகசூரிய ஆகியோர் இந்த பரிந்துரையை கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை குறைந்து செல்லுமாக இருந்தால் ஊரடங்கு சட்டத்தை மாகாண மட்டத்தில் குறிப்பிட்ட கட்டம் கட்டமாக தளர்த்த முடியும்.

மார்ச் 24ஆம் திகதி இடம்பெற்றமையை போன்று குறைந்தளவு நேரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்படுவது மீண்டும் இடம்பெறக் கூடாது என்றும் பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அதிக தொற்றாளர்கள் கண்டறியப்படும் பிரதேசங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டோ அல்லது முடக்கப்பட்டோ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பேராசிரியர்கள் கோரியுள்ளனர்

1 comment:

  1. முற்றாக முடக்குங்கல் ஆனால் முடக்கப்படும் பிரதேசத்துக்கு தேவையான உணவு பொருடகல் மற்றும் அத்தியவசிய பொருட்களை ராணுவத்தினர் அல்லது பொலிசாரை ஈடுபடுத்தி வழங்குங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.