Header Ads



நாட்டு மக்கள் அனைவரதும், ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறோம் - பிரதமர் மகிந்த


கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும் அதற்காக தொடர்ந்தும் நாட்டு மக்கள் அனைவரது ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதார துறையினர், பொலிஸார் உட்பட பொறுப்பு கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதால், வைரஸ் பரவலை தடுக்க பல சாதகமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயங்கள் மற்றும் அரசாங்கத்தின் அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இன்று தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

.இதனடிப்படையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த கட்சித் தலைவர்களின் இரண்டாவது கூட்டம் இன்று முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பமாகியது.

No comments

Powered by Blogger.