April 18, 2020

மிப்பர் மேடைகளை, நமது ஊடகங்களாக ஆக்குவோம் - உலமா சபையின் மேலான கவனத்திற்கு..

- எஸ். எம். ஹலீம் -

இலங்கையில்  முஸ்லீம் சமூகம் கடந்த காலங்களில் சொல்லொணா துயரங்களுக்கு முகம் கொடுத்ததையும், இன்னும் அது முடிந்து விடவில்லை என்பதும் பொதுவான உண்மையாகும்.

இன்னும் ஓயாத  அலையாக முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளும் புனையப்பட்ட கதைகளும் ஊடகங்கள் வாயிலாக வந்த வண்ணமே இருக்கிறது .அவ்வாறு புனையப்பட்ட செய்திகளையும் பொய்யான தகவல்களையும் பெரும்பாலான மக்கள் நம்பத்தான் செய்கிறார்கள் .அதுதான் இந்த யுகத்தின் ஊடக யுத்தம் .

பெரும்பன்னமை சமூகம் அதிகமாக புத்தகம்  ,பத்திரிகைகள் வா சிப்பவர்களாக இருக்கிறார்கள் , வானொலி, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களோடு மிக நெருக்கமான தொடர்பில் இருக்கிறார்கள். எனவே இவ்வாறான வெறுப்பூட்டும் கதைகள் அவர்களை சென்றடைந்து முஸ்லீம் சமூகத்தின் மீது ஜோடிக்கப்பட்ட துவேஷ உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கவலை என்னவென்றால் இவற்றயெல்லாம் நாம் கண்டு கொள்வதுமில்லை ,எழுதுவதுமில்லை ,எம்மால் இயலுமான ஊடகப் பயன்பாடுகளை செய்வதும் இல்லை.ஆங்காங்கே அத்தி பூத்தால் போல் தனியாக நின்று எழுதியும் பேசியும் வருபவைகளை வாசிப்பதோ கேட்பதோ அவர்களை ஊக்கிவிப்பதோ கிடையாது, எமக்கென தனியான ஊடகம் என்பது வெறும் பேசுபொருளாக தசாப்தம் கண்டுவிட்டது.

ஜும்மா  பிரசங்கங்களை  நாடுதழுவிய ரீதியில் ஒழுங்குபடுத்தினால் நமது ஊடகப்பணியின் அரைவாசி முடிந்து விடுகிறது.

தயவு செய்து அவற்றை ஒழுங்கு படுத்துங்கள் .இன்றய ஜும்மாஹ் பிரசங்கங்கள் எந்தவித தலைப்பும் இன்றி நினைத்ததில் தொடங்கி நினைத்ததில் முடிக்கும் ஒரு சம்பிரதாயமாகவே இருக்கிறது.

உச்ச தொனியில் தொண்டை கிழிய கத்துவதால் சொல்லும் கருத்து சென்றடையும் என்று எதிர்பார்ப்பது  வெறுமையாகும்..துறை சார் நிபுணர்கள் ஆசிரியர்கள் ,வரலாற்றாளர்கள் ,மருத்துவர்கள் ,வழக்கறிஞ்சர்கள் போன்றவர்களையும் வெள்ளி மேடைகளுக்கு அழையுங்கள் .கல்வியில் மார்கக் கல்வி உலகக் கல்வி என்று பிரிக்காமல் இஸ்லாமிய துறை சார் நிபுணர்களையும் வெள்ளி மேடைகளில் பிரசங்கங்கள் நடத்த ஊக்குவியுங்கள்.

நாட்டின் ,உலகின் பொது நிலைமைகளுக்கு ஏற்ப ,சமயோசிதமாக சொற்ப்பொழிவுக்கான தலைப்புகளை கொடுங்கள் ,அது நாடு தழுவிய முறையில் நடைமுறைப்படுத்துங்கள் .

நமது சமூகத்தினரின் அன்றாட பழக்கவழக்கங்கள் ,

பொதுப்போக்குவரத்து

பொதுவாக பஸ் புகையிரதம் போன்றவற்றில் பயணிக்கும் எமது பெண்கள் அதிக சத்தத்துடன் அளவளாவுதல் ஆண்கள் கைபேசியில் மிகவும் சத்தமாக உரையாடுதல் போன்றன மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கின்றது 

பெண்கள் முகம் மூடிய ஆடைகளை அணிதல் ,சிலர் சில்லறைக்கடை கருவாட்டுக் கடைகளில் வேலை செய்யத்துவிட்டு உடுப்புகளை மாற்றாமல் சொகுசு பஸ்களில் பிரயாணம் செய்து துற நாற்றம் பொறுக்க முடியாமல் பஸ்ஸில் இருந்து இறக்கி விளப்பட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.

வெளிப் பிரயாணன்ங்களுக்கு உகந்த இஸ்லாம் அனுமதித்த இலங்கை கலாசாரத்திற்கு பொருத்தமான ஆடைகளை அணிதல்.

ஆடை 

பொதுவாக ஆண்கள் கரண்டைக்காலை  தாண்டாத ,இலங்கை திரு நாட்டில் வாழும் ஏனையவர்கள் அணியும் சாதாரண ஆடையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் சிலர் மூன்று நாள் அல்லது சில்லா போன்றவை முடித்து வந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டின் கலாசார ஆடையான ஜுப்பா அணிந்து கொண்டு திரிவது சங்கடமாக இருக்கிறது.பொதுவாக மார்க்க அறிஜர்கள் மவ்லவி மார் போன்றோர்கள் இவ்வாறான ஆடையை அணிவதும் ஏனையோர் இலங்கையின் பொதுவான ஆடையை உடுத்துவது சாலச் சிறந்தது. 

சிலர் இந்த ஜுப்பா என்ற ஆடை சுன்னத்தான ஆடை என்று நம்பி பரிதாபமாகவும் அலங்கோலமாகவும் உடுத்திக்கொண்டு ,கடைகளில் வேலை செய்யுதல், பழைய போத்தல் கடதாசி சேர்க்கும் தொழில் செய்தல், ,நாட்டாமை வேலையிலும் ஈடுபடுகின்ற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் உத்தம ஸஹாபாக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் எந்த ஆடையை அணிந்தார்களோ  அதே ஆடயையே  அணிந்ததாகவும் பிரத்தியேகமான எந்த ஆடையும் அவர்கள் அணிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. .இஸ்லாம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டம் .
பெண்கள் முற்றாக முகம் மூட வேண்டும் என்பவர்கள் தாராளமாக அவர்கள் வீடுகளில் இருந்து கொள்ளுதல் அல்லது அவர்களின் சொந்த வாகனங்களில் பிரயாணம் செய்தல் சாலச்சிறந்ததாகும்..அதை விடுத்து கடற்கரை ,சிற்றுண்டிச்சாலை,பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தல் போன்றனவற்றில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல்

நடை பாதை மற்றும் போக்குவரத்து விதிகள்

இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்களில் வேகமாக பயணம் செய்யதல் ,வலதும் இடதும் தெரியாத ,நிறுத்த வேண்டிய இடம்  போன்ற ஒன்றும் தெரியாமல் பயணித்தால்
மருத்துவ மனைக்கு நோயாளிகளை பார்க்கச் செல்லுதல்

நோயாளியை பார்க்க முழுப் பட்டாளமும் கிளம்பி மருத்துவ மனையை புரட்டி எடுத்தல் ,அடுத்தவர்கள் காதைப்  பொத்திக் கொள்ளும் அளவிற்கு சத்தமாக கதைத்து தர்பார் பண்ணுதல்.

மஸ்ஜிதுகளை பயன்படுத்துதல்

தொழுவது, ஒரு குறிப்பிட்ட ஜமாத்தினர்  மட்டும் பயான் நிகழ்ச்சிகள் நாடாத்துதல்,குறித்த தினத்தில் தரித்து செல்லுதல்  தவிர்ந்த ஏனைய எல்லா நன்மையான விடயங்களிலும் மஸ்ஜிதுகளோடு ஒட்டி இருத்தல் ,மஸ்ஜிதின் ஒரு பகுதி நல்ல வாசிகசாலையாக மாற்றப்படல் ,பெண்களுக்கு பிரத்தியேகமான மார்க்க உபந்நியாசங்கள் கலந்துரையாடல்கள் செய்வதற்கான ஏற்ப்பாடுகள் செய்தல் ,போன்ற இன்னோரன்ன நல்ல தேவைகளுக்காக(மார்கம் அனுமதித்த ) பயன்படுத்துதல்

வாழப் பழகுதல், வாழ்தல்

இஸ்லாம் துறவறத்தை வெறுக்கும் ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும் .

கல்லிவிக்கு முன்னுரிமை கொடுத்தல் , வாசிப்பை ஊக்கப்படுத்துதல்,எமது வாலிபர்கள் யுவதிகளுக்கு தொழில்நுட்பம் , கணினி விஞானம், மருத்துவம், பொறியியல், பொருளாதாரம்,வரலாறு சட்டம்,ரோபோடிக்ஸ்  உடன்  சேர்த்து ம் கற்றலை  ஊக்கப்படுத்துவோம்.
வெறும் வானத்துக்கு மேலும் பூமிக்கு கீழும் மட்டுமே பேசுகின்ற, முஸ்லீம்களின் வரலாறு தெரியாத, அவர்கள் இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய அல்ஜீப்ரா தொடக்கம் வானவியல் சாஸ்த்திரம் தொட்டு நம் இளசுகளுக்கு மிம்பர் மேடைகளில் நின்று உரையாற்றி ஊக்கப்படுத்துவோம்.

அடிக்க,அடிக்க அடி  வாங்கி கோழையாக கூனிக் குறுகி கும்புடு போடுகிற ,நல்லிணக்கம் என்ற போர்வையில் ஜூப்பாவோடு வெசாக் கூடு கட்டுகிற உலக பயத்தில் பச்சோந்தியாக வாழப் பழகாமல் இருப்போம்.

எமக்கு எதிராக பரப்பப்படுகின்ற விசமப் பிரச்சாரங்களை கருத்தால் எதிர்ப்போம் ,ஊடகத்துறையில் மிளிர்கின்ற நம் இளைஞர் யுவதிகளை உருவாக்குவோம் ,எழுத வாசிக்கத் தூண்டுவோம்.

அளவை நிறுவையில்  மோசடி செய்யாத, பதுக்கல், கொள்ளை இலாபம் ஈட்டாத, வியாபாரத்தை செய்ய தூண்டுவோம். 

அல்லாஹ்வின் அனுமதி இன்றி, மரத்தின் ஒரு இலையும் உதிர்வதில்லை என்பதை உணர்த்துவோம், ஊட்டுவோம் .

நம்பிக்கை வளர்ப்போம், கோழைத்தனத்தயும், அடிமைத்தனத்தையும் இல்லாதொழிப்போம் .நாம் இந்த உலகில் வாழ வந்தவர்கள் அல்ல மாறாக ஒரு நிரந்தர வாழ்க்கைக்காய் எம்மை தயார்படுத்த வந்தவர்கள் என்பதை மனதில் பதிய வைப்போம்.நாம் பிறந்த நாட்டை நேசிப்போம் ,பசித்தவருக்கு உணவளிப்போம் அவன் ஜாதி மதம் எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும்.

உலமா சபையில் கல்விமான்களை,துறைசார் நிபுணர்களை உள் வாங்குவோம். மறணிக்கும் வரை தலைமைப் பதவி என்பதை மாற்றி அமைப்போம்.உலமா சபை!!அகீதாவில் முரண்படாத எல்லா ஜமாத்துகளையும் பிரதிநிதித்துவப் படுத்தட்டும்.அது அழகாகவும் அமைதியாகவும்,ஒற்றுமையாகவும்,யதார்த்தமானதாகவும்,இருக்கும் ,இல்லையேல்!! கருத்து வேறுபாடுகள் தசாப்ப்தங்கள் காணும்!!! எல்லாம் ஒரு கனவாகவே முடியும்.

எழுத வேண்டும் என்று தோன்றி, சிலதை எழுதத் தெரியாமலும் ,சிலதை எழுதாமலும்  விட்டு விடைபெறுகிறேன் .

ஒற்றுமைப்பட்ட, ஒரு தலைமைத்துவத்தில், அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்த இலங்கைச் சமூகமாய் எம்மை வாழ அருள் புரி ரஹுமானே .


11 கருத்துரைகள்:

We have to the writer of this article. It is a very imporatant topic. If we can use member continously and effective we will be able to solve lot of the problem.

மேல்கூறப்பட்ட விடயங்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் சென்டர்கள் தான் பொருத்தமேயண்றி மஸ்ஜித்களின் மிம்பர்கள் அல்ல.

நல்ல விடயங்கள் நிறைய உண்டு. ஜூப்பா அணிவதை காண்பது உங்களுக்கு சங்கடம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு செல்லுங்கள். ஆடை அவரவரது உரிமை இஸ்லாம் சொன்ன வரம்புகளை மீறாது அணிவது தான் நியதி.

ஒரு சில கருத்துக்களை நியாயமாக இருந்தாலும் உம்மைப் போன்றவர்கள் கருத்துச் சொல்வதால்தான் முஸ்லிம்களுக்கிடையே குழப்பம் உண்டாகிறது. மரணிக்கும் வரை தலைமைப் பதவி உமக்கு பிடிக்கவில்லையா? அல்லது றிஸ்வி முப்தியைப் பிடிக்கவில்லையா? இது இஸ்லாத்திற்கு எதிரானதா? இஸ்லாமிய வரலாற்றில் கலீபாக்கள் மரணிக்கும் வரை தலைமை வகிக்கவில்லையா? நபி (ஸல்) அவர்களது மனைவிமார்கள் முகத்தை மூடிக்கொண்டு வெளியில் செல்லவில்லையா? உமக்கு சங்கடமாக இருப்பதற்காக ஜஶ்ப்பா அணியக் கூடாதா? நானும் ஜஶ்ப்பா அணிவதில்லைதான். ஆனால் ஜஶ்ப்பா அணிவது ஹராமா? இப்படி எல்லாத்தையும் விட்டு விட்டு வந்தால் உம்மைப் போல கடைசியில் தாடியும் வைக்காமல் இருக்கவேண்டியதுதான். (நீர் தாடி வைத்திருந்தால் மன்னித்துக் கொள்ளவும்)

Alhamduillah well initiated and careful thoughts warded article for Ulama. May Allah Almighty guide all of us to do the right think at the right place (Ameen).

ok sari neega solluredu sari.but srilankawule inda thawheed jamathe mutraha olikka wendum.ade than nangal ippa seyye wendum.

நன்றி எஸ்.எம்.ஹலீம். முஸ்லிம்கள் தொடர்பான ஆய்வு மாணவன் என்கிற வகையில் இன்றைய முக்கிய பிரச்சினை ஒன்றை அறிவு பூர்வமாக அணுகியிருக்கிறீர்கள். முஸ்லிம்களின் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும். 2018ல் நான் திகணவிலும் கண்டியிலும் சிங்களவர்கள் சிலரைப் பேட்டி கண்டேன்.அவர்கள் நிதானமாக பேசியவர்கள் முஸ்லிம் சிங்கள நல்லுறவு தொடர்பாக உள்ள சிக்கல்களாக முன்வைத்தவற்றில் ஆராயப்பட வேண்டிய பலவற்றை நீங்கள் இங்கு பேசியுள்ளீர்கள். அவர்கள் சூபி பாரம்பரிய முஸ்லிகள் மற்றும் ----- ”பாரம்பரியமற்ற” முஸ்லிம்கள் என இருவேறு படுத்தியே பேசினார்கள். தேர்தலின் பின்னர் இந்த பகுப்பு அரசின் நிலைபாடாக மாறும் ஆபத்துள்ளது. பாரம்பரியம் என்பதன் ஆரம்ப புள்ளியாக 1970 தை அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சிங்களவர் மத்தியில் பகையாக வளர்ந்துள்ள இந்த 1970ன் முன் பின் என்கிற அணுகுமுறை மலையக தமிழர் மத்தியிலும் இலங்கை தமிழர் மத்தியிலும் ஊடுருவி வருகிறது. . முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முஸ்லிம்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சிங்கலவர் என்ன செய்ய வேணும் என்பதை சிங்களவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் மலையக தமிழர் என எல்லா இனங்கள் மத்தியிலும் எஸ். எல்.எம்.ஹலீம்போன்றவர்கள் ஆரோக்கிரமான சமரசத்தையும் அதற்கான விலைகள் பற்றிய அறிவையும் முன்வைத்து வருகிறார்கள்.

Why racist are attacking Muslim doctors, professional's, politicians etc.. ? Are they wearing jubba ?. And only handful (below 1%) are wearing this jubba and face cover. Will this problem come to end if those people change their dress code ?'. This may be a issue. But this not a major issue. I agree that those who are wearing face cover should not go to hospitals, public places. Better to avoid.

There are many doctors, professionals working with ACJU and serving the community. ACJU education division head is a graduate from Jamia naleemia. Better to visit ACJU head office and speak with them before giving comments. I also had many misunderstanding about them. I visited their head office for clarification. And those who have different mindset are working together in ACJU. Only one group is not controlling ACJU. ACJU should focus on their media and publish all their service through media. If not people will continue to criticise. Even in this corona crisis they did their best. From guiding the community to helping them. General public know well about the service done by ACJU. NO individual, institution is perfect. We have to encourage them.

அல்லாஹ் உங்களுக்கு நல்ல விளக்கத்தையும் மௌதூதியத்தை விட்டும் ஹிதாயத்தையும் தரட்டும்

அல்லாஹ் உங்களுக்கு நல்ல விளக்கத்தையும் மௌதூதியத்தை விட்டும் ஹிதாயத்தையும் தரட்டும்

Post a comment