Header Ads



தேர்தலை ஒத்திவைக்க சஜித் அணி வேட்பாளர் உண்ணாவிரதம்


திகதி குறிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை உடனடியாக ஒத்திவைக்குமாறு கோரி, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ், வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தவர்களில் ஒருவர், உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள இந்திக பண்டார என்பவரே, இவ்வாறு உண்ணாவிரதப் போரட்டத்தில், மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக குதித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முகக் கவசத்தை அணிந்துகொண்டே, உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் குதித்துள்ளார்.

'கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சகல குடும்பங்களுக்கும் மாதந்தாம் 20ஆயிரம் ரூபாயை வழங்கவேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை, கொரோனா தொற்று முற்றாக ஒழிக்கப்பட்டதாக எழுத்துமூலமாக உறுதிப்படுத்தும் வரையிலும் திறக்கக்கூடாது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரம் மற்றும் களைநாசிகளை வழங்குமாறும் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

தன்னுடைய கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும் வரையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடபோவதில்லை என்று,  என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.