Header Ads



ஐக்கிய அமீரகத்திலுள்ள, இலங்கையர்களின் கவனத்திற்கு

(நா.தனுஜா)

கொவிட் - 19, பரவல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஐக்கிய அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்காக அனைத்து வெளியகத் தரப்பினருடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து ஐக்கிய அமீரகத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த பல வாரங்களாக தூதரகம், கொன்சியூலர் அலுவலகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நலன்புரிச் சங்கங்கள், மதநிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுவாழ் இலங்கை சமூகம் ஆகியவை ஒன்றிணைந்து கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்காக மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர்.

அனைத்து விசாரணைகளுக்கும் உரிய பதில்களைப் பெற்றுக்கொடுத்தல், விசா விடயங்களில் உதவுதல், வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களைப் புதுப்பித்தல், மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் தொற்றுக்குள்ளான இலங்கையர்களுக்கு நுழைவு அனுமதிக்கு உதவுதல், உணவுப்பொருட்களை விநியோகித்தல் மற்றும் தொற்றுக்குள்ளான நோயாளர்களுடன் தினமும் தொடர்புகொள்ளல் ஆகியவை முன்னெடுக்கப்படும் அதேவேள, இலங்கையர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் விரைவாகப் பதில்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் 800119119 கட்டணமற்ற 24 மணிநேர தொலைபேசி சேவையின் ஊடாக வார இறுதிநாட்களிலும் இலங்கையர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.