April 09, 2020

அக்கரைப்பற்றில் அதன் பெயர், முஹம்மட் கொரோனா

- Dr Mohamed Mubaris  -

இதுவரை இலங்கையில் சுமார் 190 நபர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக பரிசோதனைகளின் பின்னரான தகவல்களிலிருந்து தெரிய வருகிறது
அதில் #அவர்_ஒரு_இஸ்லாமியராக_இருந்தால் மட்டும் அதனை 
பெயர் ஊர் விலாசத்தோடு முந்திக் கொண்டு விளம்பரம் செய்யும் நயவஞ்சகர்களும் இஸ்லாமியர்களாகத்தான் இருப்பதை எண்ணும்போது
நானும் ஒரு இஸ்லாமியனாக இருப்பது மனதைப் பிழிந்தெடுக்கிறது
நேற்றைய தினம் #இலங்கையில்_3_நபர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக பரிசோதனையின் பின்னரான தவல்கள் தெரியப்படுத்தின.
ஆனால் அதில் #ஒருவர்_மாத்திரம்_இஸ்லாமியர் என்பதனால்
அவர் #அக்கரைப்பற்று - 19 ஐச் சேர்ந்தவர் என்றும் 
#ஹாசீம்_ஆலிம்_வீதியைச்_சேர்ந்தவர் என்றும் உலத்திற்கே விளம்பரப்படுத்தப் பட்டதை
களத்தில் நின்றவன் என்ற வகையில் உணரமுடிந்தது.
அதே வேளை #மற்றைய_இருவரும் கறுப்பா சிவப்பா என்பதைக் கூட யாரும் தெரிவிக்கவும் இல்லை. அவர்கள் யார் எந்த ஊர் எந்த வீதியைச் சேர்ந்தவர் என்பதும் யாருக்கும் தேவைப்படவும் இல்லை.
இத்தனை களேபரத்திற்கும் மத்தியில் குறித்த நபர் நேற்று இரவு #வெலிக்கந்தை வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவருடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக இனங்காணப்பட்ட 9 பேர் 
14 நாட்கள் #மஹரவில Qurantine centre இற்கு இன்று மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறித்த அந்த நபர் #அங்கு_மிகவும்_நலமாக_தேக_ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
ஆனால் அவர் கொரோனா தொற்றோடு அக்கரைப்பற்றில் மையத்து வீடொன்றிற்குச் சென்றார். அங்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுடன் கை குலுக்கினார் என்று #பச்சைப்_பொய்யை குர்ஆன் ஆயத்தைப் போல் பரப்பி மகிழ்ந்தனர் சில #சில்லறைச்_சோனிகள்.
அவர் மரணித்து விட்டார் என்று Breaking News போட்டு தங்களது முனாபிக் தனத்தை வெளிப்படுத்தியது #மற்றொரு_சோனிகள்_சங்கம்.
இத்தனையையும் இராப்பகலாக Share பண்ணிப் பண்ணி மாற்று மத சகோதரர்களின் வாய்க்குத் தீனி போட்டது #சோனிச்_சங்கிகள்_கூட்டம்.
குறைந்த பட்சம் அந்த நபரின் குடும்பத்தாரில் ஒருவராக தம்மை நினைத்துப் பார்க்கக் கூட உள்ளத்தில் ஈரமில்லாத நமது மாட்டுச் சோனிகள்
ஈமானை இழந்து நிற்பதை எண்ணி வேதனைப்படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை.
புறப்படுகையில் அம்பியுலன்ஸ் வண்டியில் ஏறுவதற்காக அவர் வரும்போது அவதானித்தேன். #மிகவும்_தைரியமாகவும்_கம்பீரமாகவும்_நடந்து_வந்தார்.
அந்த இடத்தில் வேறு யாராகவும் இருந்திருந்தால் பயத்தின் மேலீட்டால் #அங்கேயே_உயிரை_மாய்த்திருப்பார்கள்.
குவைத் நாட்டில் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்பட்ட இது போன்றதொரு நபர் மாடி வீட்டில் இருந்து பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி நாம் அறிந்ததுதான்
ஆனால் இந்தளவு அசாத்தியமான தைரியம். அவருக்கு மட்டும் எப்படி சாத்தியபானதோ தெரியவில்லை.
#இப்போது_சொல்கிறேன் 
#குறித்து_வைத்துக்_கொள்ளுங்கள்
மஷூர் 
உங்களுக்கு எதுவும் நடக்காது
தைரியமாக இருங்கள்
இப்படி நான் சொல்வதற்கு 
நியாயமான ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன
உங்களது 
இறைநம்பிக்கையின் ஆழத்தை 
இறைவன் சோதித்துப் பார்க்கிறான்
நீங்கள் 
உறுதியான ஈமான் உள்ளவர் 
என்பது உறுதியாகி விட்டது
உங்களுக்கு எதுவும் நடக்காது 
இறைவன் நாட்டத்தோடு
நீங்கள் நலமாக 
வீடு வந்து சேர்வீர்கள்
சோதனைகளின் பின்னரான 
மகிழ்ச்சி 
சொல்லில் அடங்காதது
அந்த மகிழ்ச்சியை
நீங்கள் குடும்பத்தோடு
அனுபவிப்பீர்கள்
பொறுத்தததோடு 
இன்னும் கொஞ்சநாள்
பொறுத்திருங்கள்
இந்த ஊருக்குப் 
#பழி சொல்லத்தான் தெரியும் 
#வழி சொல்லத் தெரியாது 
என்று எழுதி வைத்தான் 
#மு-மேத்தா
அது இந்த 
அக்கரைப்பற்றிற்கு 
அப்படியே பொருந்திப் போகிறது
இனி இந்த ஊரில் 
இருப்பதும் ஒன்றுதான்
இல்லாமல் 
இருப்பதும் ஒன்றுதான்
******
********

7 கருத்துரைகள்:

அந்த நபரின் வீட்டின் அருகே ஒரு முட்டாள் சோனி லைவ் வீடியோ பன்னி Facebook ல் நேரலை கொடுத்தான்,அதை தடுத்து நிறுத்தாமல் அந்த ஊரை சேர்ந்த ஒரு டாக்டரும்,அந்த ஊர் உல்லூராட்சி உறுப்பினரும் பேட்டி கொடுத்தார்கள்.ஒட்டு மொத்ததில் சோனிகல் தங்கள் ஊரை,தங்கள் இனத்தை அடுத்தவனுக்கு காட்டிக் கொடுப்பதிலும்,லைவ் டெலிகாக்ஷ்ட் பன்னுவதிலும் இருப்பதை பார்க்கும் போது கேவலமாகவும்,வேதனையாகம் உள்ளது.

ஊரில் சிலர் ஊரில் வாழும் மற்றும் பலருக்கு இவ்வாறு திட்டுவதைத் தயவுசெய்து தவிர்ந்து கொள்ளுங்கள். இந்த செய்திகளை ஊரைச் சேராத இந்த நாட்டில் வாழும் தமிழ் தெரிந்து அனைவரும் வாசிக்கின்றனர். அவர்களுக்கு உங்கள் அக்கரைப்பற்று பற்றிய நல்லெண்ணம் நிச்சியம் ஏற்படமாட்டாது.அந்த நிலைக்கு உங்கள் ஊரையும் ஊர் மக்களையும் தள்ளிவிடாதீர்கள். அனைவரின் பாவங்களையும் மன்னிக்க அல்லாஹ் போதுமானவன்.

Very true...we are born to criticise..never learnt to appreciate
God is Great...May Almighty Allah make things easier for him.Aameen

You are absolutely correct. Our enemies are from us. They only know betrayal, slander and polluting. Shame Shame...

ஐயா அருமையான ஆக்கம். இம்மூடத்தனம் அக்கரைப்பற்றுக்கு விஷேடமானது. முஸ்லிம்களுக்குப் பொதுவானது. ஒவ்வொரு சமூகத்தின் அழிவுக்கும் அல்குர்ஆன் ஒவ்வொரு தெளிவான காரண காரியத்தைக் கூறுகிறது. இன்றைய சமூகத்தின் அழிவுக்கும் தெளிவான காரண காரியம் தேவையல்லவா?

Post a Comment