Header Ads



சாலைகளை முடக்கி, ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

கொரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில் சாலைகளை மூடி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மெக்சிகன் மேயர் ஒருவர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தெற்கு மெக்சிகன் மாநிலமான குயின்டனா ரூவில் அமைந்துள்ள Mahahual நகர மேயரே மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Obed Duron Gomez என்ற இவர் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பொதுமக்களுடன் கலந்துரையாட சென்ற நிலையில், வாகனத்தில் வழிமறித்த கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டத்தில் அவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட கும்பலானது, சம்பவயிடத்தில் இருந்து தப்பியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் வேறு எவருக்கும் காயமேற்படவில்லை என்றே உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள போதைமருந்து கும்பலிடம் இருந்து குறித்த மேயருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும்,

சாலைகளை முடக்கி ஊரடங்கு பிறப்பித்துள்ளதால், தங்கள் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாலையே அவர்கள் மேயரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் உரிய விசாரணைக்கு பின்னரே இந்த விவகாரம் தொடர்பில் முடிவுக்கு வர முடியும் என மாநில குற்றவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.