Header Ads



இலங்கை எதியோப்பியாவை விடவும் பின்தங்கியுள்ளது - ராஜித

கொரோனா வைரஸ் தொற்று குறித்த பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் இலங்கை எதியோப்பியாவை விடவும் பின்தங்கியுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மக்களை தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினை இல்லாதொழிக்க முடியாது.

தனிமைப்படுத்துதல் கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்று மட்டுமே.

பீ.சீ.ஆர் பரிசோதனைகளை அதிகளவில் நடத்துவதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனை அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறியுள்ளது.

அமெரிக்காவில் 8 லட்சம் பேருக்கு நான்கு மில்லியன் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. அநேகமான நாடுகள் மில்லியன் கணக்கான பீ.சீ.ஆர் பரிசோதனைகளை நடத்தியுள்ளன.

இலங்கை இந்த பரிசோதனைகளை நடத்துவதில் ஆபிரிக்காவின் மிக வறிய நாடுகளை விடவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இவ்வாறான நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறையினருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக தொற்று நோயியல் நிபுணர்களின் ஆலோசனை வழிகாட்டல்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Ethiopia is in new era with its new capable president...

    ReplyDelete

Powered by Blogger.