Header Ads



உடல்கள் நிரம்பியிருக்கும் அமெரிக்க, மருத்துவமனையின் அறை படங்கள் வெளியாகின


அமெரிக்காவின் டெட்டிரோய்டின் சினாய் கிரேஸ் மருத்துவமனையில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

சினாய் கிரேஸ் மருத்துவமனையின் அவசர பிரிவை சேர்ந்த பணியாளர்கள் இந்த படத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

மருத்துவமனையின் பல பகுதிகளில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அந்த படங்கள் காண்பித்துள்ளன.

அவசரசேவை பிரிவில் பணியாற்றுபவர்கள் இந்த படத்தை வழங்கியுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

பிரதே அறை முற்றாக நிரம்பிருப்பதாலும் இரவில் அது செயற்படாததன் காரணமாகவும் ஆய்வறையொன்றை உடல்களை வைப்பதற்கு மருத்துவமனையின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் நோயாளர்களிற்கே மருத்துவமனையில் இடமில்லை,இதன் காரணமாக உடல்களை கட்டில்களில் வைத்திருக்க முடியவில்லை என ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டிலில் இரு உடல்கள் காணப்படுவதையும் கதிரையொன்றில் உடல் ஒன்று வைக்கப்பட்டிருப்பதையும் படங்கள் காண்பித்துள்ளன.மூன்று உடல்களும் பைகளால் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை மருத்துவமனையில் குளிரூடப்பட்ட அறையில் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை காண்பிக்கும் படங்கள் கிடைத்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் உடல்கள் காரணமாக இறந்தவர்களின் உடல்கள் இவ்வாறு வைக்கப்படுவதை பார்த்துள்ளதாக மருத்துவமனையின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.