Header Ads



'குடி' மக்களுக்கு கொண்டாட்டம், மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று முண்டியடிப்பு


-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

திங்கட்கிழமை 20.04.2020 ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை அடுத்து  மதுபான கடைகள் திறக்கப்பட்டதனால் 'குடி' மக்களான மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை கொள்வனவு செய்வதில் முண்டியடித்ததை அவதானிக்க முடிந்தது.

காலை வேளையில் மதுபானக்கடைகளில் அதிகளவான ஆண்கள் நீண்ட வரிசையில் கானப்பட்டபோதிலும் நண்பகல் அளவலில் மதுப்பிரியர்கள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது.

மாவட்டத்தி;ல் எல்லா மதுபான சாலைகளும் மதுப்பிரியர்களினால் நிரம்பிக் காணப்பட்டது.    

ஊரடங்கு தளர்;த்தப்பட்டதை அடுத்து மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்ததையும்  போக்குவரத்துக்கள் சாதாரணமாக இடம்பெற்றதையும் அவதாபிக்க முடிந்தது.

அதிகளவான பொது மக்கள்  உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டாததையும் அவதானிக்க முடிந்தது அவர்களிடம் வினவியபோது தங்களின் விடுகளில் போதியளவான உணவுப்பொருட்களைத் தாங்கள் ஏற்கெனவே கொள்வனவு செய்து வைத்திருப்பதாகவும் இன்னும் இரண்டு வாரத்திற்கு போதுமான பொருட்கள் தங்களிடம் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மருந்தகங்கள் புடவைக்கடைகள் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு கடைகள் பூட்சிற்றிகள் சந்தைகள் சிகையலங்கார கடைகள் மதுபானக்கடைகள் என பலதும் திக்கப்பட்டிருந்தது நகரப்பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகமாக கானப்பட்டதை அவதானிக்கமுடிந்தது.

1 comment:

  1. இப்படி எந்த சமூக இடை வெளி இல்லாமல் மதுக்கடைகலில் கூட்டம் கூடினால் கொரோனா பரவாதா

    ReplyDelete

Powered by Blogger.