Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரருடன் தொடர்பிலிருந்த ஊழியர் : ஆளுநர் காரியாலயம் தற்காலிகமாக பூட்டு

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தின் சேவகர் ஒருவர் கொரோனா தொற்றுக்காளான கடற்படை வீரருடன் தொடர்புகளை எற்படுத்தியிருந்தமை தெரியவந்ததை அடுத்து ஆளுநர் காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லலித் யூ கமகே தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கும் வெலிசறை கடற்படை முகாமில் இருந்த கடற்படை வீரருடன் ஆளுநர் காரியாலயத்தில் சேவை செய்யும் நபர் ஒருவர் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்தது. அதனையடுத்து பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஆளுநர் காரியாலயத்தை தற்காலிகமாக மூடிவதற்கு  தீர்மானித்தோம்.

குறித்த நபர் கடற்படை வீரரின் மோட்டார் வண்டியில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறை திருத்திக்கொடுக்க  உதவி செய்திருக்கின்றார். காரியாலய சேவகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இருந்தபோதும் காரியாலய ஊழியர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தற்காலிகமாக ஆளுநர் காரியாலயத்தை இன்று நண்பகலில் இருந்து மூடுவதற்கு தீர்மானித்தேன் என்றார்.

No comments

Powered by Blogger.