Header Ads



தேசத்தின் இருப்புக்காக பொதுமக்களின், சுகாதார நலனுக்கு ஏற்புடைய சட்டதிட்டங்கள் அமுல் - பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசௌகரியமான சூழ்நிலையிலும், புதுவருடத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துச்செய்தியை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

மிகவும் முக்கியமானதொரு அபாயத்தினை எதிர்நோக்கிய நிலையில் இம்முறை புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே நீங்கள் இந்தப் புத்தாண்டினை சுகாதார ரீதியான எச்சரிக்கைகள் மற்றும் சிபார்சுகளுக்கு உட்பட்ட வகையிலேயே கழிக்க வேண்டியுள்ளது. 

தேசத்தின் இருப்புக்காக பொதுமக்களின் சுகாதார நலனுக்கு ஏற்புடையவாறு விதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் தடைகள் புத்தாண்டு நாட்களிலும் அமுல்படுத்தப்படுகின்றன என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த சுகாதாரரீதியான தடைகள் மற்றும் சிபார்சுகளின் மத்தியிலும் புத்தாண்டின் அர்த்தம் அழிந்து விடாது பேணிக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

சிங்கள, தமிழ் புத்தாண்டு இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமை மற்றும் சகவாழ்வினை எடுத்தியம்புகிறது. ஒரே சந்தர்ப்பத்தில் வேலை செய்யும் எமக்கு தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்த முடியும். வீட்டினுள் மாத்திரம் இருந்து இந்த சம்பிரதாய சடங்குகளை நிறைவேற்றி எமது மரபுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். அது மிகவும் எளிமையாக, ஆடம்பரமின்றி புத்தாண்டின் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதாக அமையும். இந்த எளிமை, ஆடம்பரமின்மை தேசத்தின் இருப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என்பதை வரலாற்றை ஆராயும்போது தெளிவாகிறது.

பல நூறு ஆண்டுகளாககத் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வந்த பழக்கவழக்கங்கள் மூலம் வெளிப்பட்ட தேசிய உணர்வுகளின் பெறுமானத்தை இன்று முன்னெப்போதுமில்லாதவாறு உணர்கிறோம். சம்பிரதாயரீதியாக நாட்டினர் மத்தியில் காணப்பட்ட அந்த பிணைப்பு, ஒற்றுமை, மக்கள் கலாசாரத்தின் பலம் காரணமாகவே முழு உலகினையும் திகைப்படையச் செய்த, ஆதரவற்றதாக மாற்றிய தொற்றுநோய்க்கு நாம் சிறப்பாக முகங்கொடுக்கிறோம்.

எனவே இம்முறை புத்தாண்டினை எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் உங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் கொண்டாடுமாறு உங்கள் அனைவரிடமும் மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.