Header Ads



சவுதியில் வாழும் இலங்கையர்கள் அங்கு அமுலிலுள்ள ஊரடங்கு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், சவுதியிலுள்ள இலங்கையர்களுக்கு அவசியமான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இலங்கைத் தூதரகம் முன்னெடுத்திருக்கிறது.

இது குறித்து சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சுமார் 135,000 இலங்கையர்கள் சவுதியில் வசிக்கும் நிலையில், அவர்களுக்கு இலவசமாக சானிட்டைஸர் மற்றும் முகக்கவசங்களை இலவசமாக  வழங்குவதற்கும் தூதரகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி ஆரம்பத்திலேயே கொரோன வைரஸ் பரவல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய காணொளிகள் மற்றும் குறுந்தகவல்கள் என்பனவும் சமூகவலைத்தளங்களின் ஊடாக இலங்கைத் தூதரகத்தினால் பகிரப்பட்டது. மேலும் சவுதியிலுள்ள இலங்கையர்கள் ஏதேனும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் தொடர்பு கொள்வதற்கான 24 மணிநேர சேவை தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் அங்கு அமுலிலுள்ள ஊரடங்கு மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும்  தூதரகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

2 comments:

  1. Until now we didn't get any information, so may we have any contact details and how we can get those all help/ information? or its just news only???

    ReplyDelete
  2. மேலே உள்ள பதிவை யார் வெளியிட்டார்களோ தெரியாது.நான் ரியாத் நகரத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் காணவே இல்லை.இவர்கள் தரும் mask / sanitizer உதவி எடுக்க 100 ரியால் டாக்ஸிக்கு செலவிட வேண்டும். அதனால் வாழக்கூடியவர்களுக்கு பிரயோசனமான விசயங்களை மட்டும் வெளியிடவும்..

    ReplyDelete

Powered by Blogger.