Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளான முஸ்லிம்கள் இருவர், மீஎல்லையில் மறைந்திருந்ததாக கூறப்படுவது பொய்

மாத்தறை ஹக்மன மீஎல்லையில் தனிமைப்படுத்தல் செயன்முறையில் பங்குபற்றாதவர்கள் மறைந்திருப்பதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென மேற்கொண்ட தேடலில் உறுதியானது. 

மாத்தறை ஹக்மன மீஎல்லையில் இருவர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபடாது மறைந்திருந்ததால் கிராமத்தில் 16 பேர் தனிமைப்படுத்தல் நிலையமொன்றுக்கு அனுப்பப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இவர்களில் இருவருக்கு கொரோனா தொற்றியிருந்ததாகவும், அவர்கள் முஸ்லிம்கள் என்றும் வேண்டுமென்றே கொரோனா பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறி பௌத்த தேரரொருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

குறித்த இருவருக்கும் கொரோனா தொற்றியுள்ளதாகவும் அதனை பொது சுகாதார பரிசோதகர் உறுதிப்படுத்தியதாகவும் அந்த தேரர் கூறுகின்றார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய செய்திகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறுப்பை வெளிப்படுத்தும் பின்னூட்டங்களைக் காண முடிந்தது.

மாத்தறை ஹக்மன மீஎல்லை கிராமவாசிகள் இருவர் பெப்ரவரி மாதம் இந்தியா சென்றுள்ளதோடு, அவர்கள் மார்ச் மாதம் முதலாம் திகதி நாடு திரும்பியுள்ளனர். இலங்கையில் இரண்டாவது கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவர் மார்ச் மாதம் 11ஆம் திகதியே கண்டறியப்பட்டார். 

அதன் பின்னர் மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதிக்கு இடையிலான காலப்பகுதியில் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென் கொரியாவில் இருந்து வந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119க்கு அழைப்பை ஏற்படுத்தி, தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று மார்ச் மாதம் 16ஆம் திகதி பொலிஸ் ஊடக அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தது.

மீண்டும் மார்ச் மாதம் 17ஆம் திகதி காலை 8.00 மணிக்கு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்தலொன்றை வெளியிட்டு, ஐரோப்பா, ஈரான் அல்லது தென் கொரியாவில் இருந்து வந்தவர்கள் தம்மைப் பதிவு செய்துகொள்ளும் போது பொலிஸ் நிலையத்துக்கு வரவேண்டிய கட்டாயமில்லை எனத் தெரிவித்திருந்தது. பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பொன்றை வழங்கி தம்மைப் பதிவு செய்துகொள்ள முடியுமென்றும் தெரிவித்திருந்தது.

மார்ச் மாதம் 10ஆம் திகதியும் அதன் பின்னரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் பிரதேச பொது சுகாதார பரிசோதகரிடம் தம்மைப் பதிவுசெய்துகொள்ள வேண்டுமென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மார்ச் மாதம் 28ஆம் திகதி அறிவித்திருந்தார்.

மார்ச் மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் உலகின் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் தனிமைப்படுத்தலில் ஈடுபட தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டுமென்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவித்தார்.

அதற்கேற்ப மார்ச் மாதம் முதலாம் திகதி இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டுமென்ற தகவல் மீஎல்லை கிராமத்திற்கு வந்தடையவில்லை என்று அப்பிரதேசத்திலுள்ள ஒருவர் தெரிவித்தார். 

‘மார்ச் 10ஆம் திகதிக்குப் பின்னர் வந்தவர்கள் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டுமென்றே கிராமத்தில் அறிவிக்கப்பட்டது. மார்ச் 1ஆம் திகதி நாடு திரும்பிய இவர்கள் இருவரும் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. எனவே, அவர்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடாது மறைந்திருந்தார்கள் என்ற செய்தி பொய்யானதாகும். ஏழாம் திகதி ஒரே தடவையில் பொலிஸார், சுகாதார அதிகாரி மற்றும் ஊடகத்தினர் வந்து குற்றாவாளிகளைக் கொண்டு செல்வது போன்று அவர்களைக் கொண்டு சென்றனர். உண்மையில், கொரோனா தடுப்பு முயற்சிகள் அனைத்துக்கும் நாம் ஒத்துழைத்துள்ளோம். முறையாக தகவல் பரிமாறப்படாத நிலையில் இவர்களை ஊடகங்களில் குற்றவாளிகள் போன்று சித்தரிப்பது பிழையானதாகும்’ என்று அவர் தெரிவித்தார். 

அந்த ஊரில் யாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியில்லை என்றும் அந்த இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பௌத்த தேரர் கூறுவது பொய் என்றும் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார். 

இதுபோன்ற அனர்த்த நிலையில் போலி செய்திகள் பரப்பப்படுவதால் இனங்களுக்கிடையிலான வெறுப்பு அதிகரிப்பதாகவும் நோய்த் தொற்று குறித்த அவதானம் குறைவடைவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.  media

2 comments:

  1. பௌத்த மதகுருமார்களை பௌத்த சமூகம் அவரகள் கடவுளுடன் சம்பந்தப்பட்ட (அ)யோக்கியர்கள் என்றுதான் காலம் காலமாக நம்பி வருகின்றனர். அதனால்த்தான் வீடுகளுக்குள்ளும் எவ்வித தடையுமின்றி செல்லவும் வீட்டுப் பெண்களுடன் பழகவும் பௌத்த சமூகம் அனுமதித்து வருகின்றது. இலங்கை முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளை பௌத்த சமூக மத்தியில் படுபாதகமான பொய்களைக்கூறி பரப்புவதில் மிக அதிக பங்குள்ளவரகளாக பௌத்த குருமார்களே முண்ணனியில் இருப்பதாக அறிய வருகின்றது. இப்படியான சந்தர்ப்பத்தில் இப்படியான பொய்யரகளை எப்படி தொடர்ந்து எதிர்காலத்தில் தம் வீடுகளுக்குள் நுழைய பௌத்த மக்கள் அனுமதிப்பர். சகல பாவங்களிலும் பொய் சொல்வதுதான் மிகவும் கொடிய பாவம். அதனை மதத்தைக் காக்கும் குருமார்கள் செய்யலாமா? மதம் என்பது கடவுளின் புறத்தில் இருந்து வருவது அல்லவா? அதனை பௌத்த தர்மம் தொடர்ந்து அனுமதிக்குமா?

    (எப்படித்தான் எழுதினாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதும் எங்களுக்கு தெரியாததல்ல)

    ReplyDelete
  2. Why not both of them go for test?

    ReplyDelete

Powered by Blogger.