April 05, 2020

தப்லீக் ஜமாத் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்தனர் - கொரோனாவைவிட வெறுப்புப் பிரச்சாரம் மிக ஆபத்தானது

கொரோனா சூழலிலும் மதம் சார்ந்த வெறுப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது, மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

“கொரோனா அபாயத்தில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “தப்லீக் ஜமாத் அமைப்பின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமே முன்வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்; தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதையடுத்து அம்மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் தம்மை மருத்துவ பரிசோதனைக்கு இப்போது உட்படுத்திக் கொண்டுள்ளனர் என தமிழக மருத்துவத் துறையின் அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாடு சட்டவிரோதமாக நடத்தப்பட்டது அல்ல. வழக்கமாக நடத்தப்படும் ஒன்றுதான் என்பதை அதை நடத்திய தப்லீக் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

இந்நிலையில் அதில் பங்கேற்றவர்கள் அனைவரையும் தேசவிரோதிகள் போல சித்திரித்தும், அவர்கள் ஏதோ கொரோனாவைப் பரப்புவதற்காகவே அங்கு கலந்து கொண்டார்கள் என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஒருசில சமூகவிரோதிகள் ஏற்படுத்திவருகின்றனர்.

இதனை முன்வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. கொரோனா தொற்று ஒருவரையொருவர் தொட்டால்தான் பரவும் என்று கூறப்படுகிறது. ஆனால், வெறுப்புப் பிரச்சாரம் பார்க்காமலேயே பரவக்கூடியது. எனவே, கொரோனாவைவிட வெறுப்புப் பிரச்சாரம் மிகவும் ஆபத்தானது.

கொரோனாவை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் மனிதநேயத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மக்களிடையே மத உணர்வின் அடிப்படையில் வெறுப்பை விதைத்து பிரிவினையை ஏற்படுத்தும் இத்தகைய வெறுப்புப் பிரசாரங்களை கைவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்த இக்கட்டான சூழலிலும் மதம் சார்ந்த வெறுப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது, மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

3 கருத்துரைகள்:

ஐயா திருமாவளவன் இரட்டை வேடமணியாத என்றுமே மனித நேயமிக்கவர்.


For the benefit of www.jaffnamuslim.com readers. 33 Sri Lankan Muslims are in this group. THE ACJU AND THE TABLIQ MARKAS SHOULD GIVE THE NAME LIST OF THESE SRI LANKAN MUSLIMS TO THE "PRESIDENTIAL TASK FORCE FOR PREVENTION OF COVID19" AND THE GOVERNMENT SO THAT THEY CAN BE TRACKED DOWN AND SUBJECTED TO QURANTINE/MONIORING ACCORDINGLY WHEN THEY ARRIVE AT THE BANDARANAIKE INTERNATIONAL AIRPORT AND STOP THEM FROM SNEAKING OUT TO THE VILLAGES THEY BELONG TO, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".
READ THE NEWS BELOW:
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 1023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
[Sunday 2020-04-05 20:00]
https://seithy.com/breifNews.php?newsID=243707&category=IndianNews&language=tamil

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் ஊர் திரும்பிய நிலையில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக தெலுங்கானாவில் இருந்து டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்களில் 6 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தனர். இதையடுத்து மாநாட்டில் பங்கேற்ற அனைவரின் விவரங்களையும் சேகரித்து அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை 1023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 17 மாநிலங்களை சேர்ந்தவர்களில் 1023 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் இந்த குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் பங்கேற்றவர்கள், தொடர்புடையவர்கள் என 22 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20 வயதுக்கு உட் பட்டோர் 9 சதவீதம் பேர், 21 முதல் 40 வயதுடையவர்களில் 42 சதவீதம் பேர், 41 முதல் 60 வயதுடையவர்கள் 33 சதவீதம் பேர் ஆவர். 60 வயதுக்கு மேல் 17 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

சங்கிகலின் திட்டமிட்டசெயல்

Post a comment