Header Ads



இந்தோனீசியாவின் அட்ஜே மாகாணத்தில், தொழுகை நடத்த அனுமதி

இந்தோனீஷியாவில் அட்ஜே மாகாணத்தில் தொடர்ந்து இரவு நேர ரமலான் தொழுகை மசூதிகள் நடைபெறும் என அந்த மாகாண அரசு தெரிவித்துள்ளது. அந்த மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனீசியாவின் அட்ஜே மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய மசூதி ஒன்றில் ரமலான் மாத தொழுகைக்காக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடினர்.

சமூக கட்டுப்பாடு வழிமுறைகளுக்கு எதிராக இடைவெளி இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் அருகில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். இதில் பலரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

"கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துவிடுவோமோ என்ற அச்சம் இருந்தாலும், அதனால் என் தொழுகையை செய்யாமல் இருக்கமாட்டேன். நாம் சுத்தமாக இருந்து, தனிப்பட்ட சுகாதார முறையை பராமரிப்பது முக்கியம்," என்கிறார் பிபிசி இந்தோனீசிய சேவையிடம் பேசிய புட்ரி சாரா.

இந்தோனீசிய அரசு விதிக்கும் விதிமுறைகளைவிட உள்ளூர் மதகுருக்குள் வெளியிடும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்குதான் அட்ஜே மாகாண மக்கள் மதிப்பளிப்பார்கள் என சியா குவாலா பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் மரினி கிரிஸ்டியானி கூறுகிறார்.

இந்தோனீசியாவில் இஸ்லாத்தின் ஷிரியா சட்டத்தை பின்பற்றும் ஒரே மாகாணம் அட்ஜே.


இன்னும் அங்கு பொதுவெளியில் கசையடிகள் கொடுப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த செவ்வாயன்று கூட, இஸ்லாமிய விதிகளை மீறியதற்காக ஆறு பேருக்கு கசையடி கொடுக்கப்பட்டது. அதில் ஒருவர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தார். BBC

No comments

Powered by Blogger.