Header Ads



இலங்கையில் தங்கியுள்ள பிரித்தானிய, பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

(ஆர்.ராம்)

இலங்கையில் உள்ள அனைத்து பிரிதானிய பிரஜைகளும் பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிட்டுகின்றபோது மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பிச் செல்லுமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கோரியுள்ளார். 

பிரித்தானிய பிரஜைகளுக்கான பயண ஆலோசனைகளை வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகம் அறிவித்துள்ளது. 

அந்த அறிவிப்பில் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் அத்தியவசிய சர்வதேச பயணங்களை தவிர ஏனைய பயணங்களை தவிர்க்குமாறு அனைத்து பிரித்தானிய பிரஜைகளிடமும் கோரப்படுகின்றனர். 

சர்வதேச நாடுகள், பிரதேசங்களுக்கிடையிலான எல்லைகளில் மட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னறிவித்தலின்றி பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவ்வாறான பயணங்களை கட்டுப்படுத்தவும் முடியும். 

மேலும் பிரித்தானிய பிராஜாவுரிமையைக் கொண்டுள்ள நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்கின்றீர்கள் என்றால் உடனடியாகவே தாயகத்தற்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள். 

அத்துடன் பல விமானப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டு வருகின்றன. 

மேலும் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஆகவே பாதுகாப்பான விமானப் சேவைகளை பயன்படுத்தி மீண்டும் நாடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டன், இலங்கையில் கொரோனா தாக்கத்தினால் மோசமான நிலைமைகள் ஏற்பட்டால் தூதர சேவைகள் உட்பட விமான சேவைகளும் மேசமாக பாதிக்கப்படலாம். 

ஆகவே எதிர்வரும் காலங்களில் விமனங்கள் சேவையில் ஈடுபடும். ஆப்போது பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று எம்மால் உத்தரவாதம் அளிக்க முடியாது. 

எமது அரசாங்கம் அனைத்து பிரஜைகளையும் நாடு திரும்புமாறு பயண அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.  இந்நிலையில் இலங்கையிலும் பிரித்தானிய பிரஜைகள் இருக்கின்றார்கள். தற்சமயம் கட்டார் ஏர்வேஸ் டோகாவிலிருந்து வெளிச்செல்லும் விமானங்களை இயக்குகிறது. 

அங்கிருந்து லண்டன் உள்ளிட்ட பல இடங்களுக்கு இணைப்புகள் கிடைக்கின்றன. ஆகவே அவற்றை பயன்படுத்துவதற்கான வசதிகள் காணப்படுகின்றபோது அனைத்து பிரஜைகளும் நாடு திரும்ப முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.