April 10, 2020

அதாவுல்லா ஏன் மௌனமாக இருந்தார் என தேடியவர்கள், மகிந்த முன் அவர் தைரியமாக பேசியதை ஏன் பாராட்டவில்லை...?

- Mubarak Abdul Majeed -

கொரோனா ம‌ய்ய‌த்துக்க‌ளை எரிக்க‌ வேண்டாம் என‌ அதாவுள்ளா  சொல்லியும் பிர‌த‌ம‌ர் ஏற்காத‌து ஏன்? அதாவுள்ளா ம‌ஹிந்த‌வுக்கு மிக‌ நெருக்க‌மாக‌ இருந்தார் அல்ல‌வா என்றெல்லாம் ப‌ல‌ரும் இப்போது கேள்வி எழுப்புகிறார்க‌ள். இவ‌ர்க‌ளேதான் சில‌ நாட்க‌ளுக்கு முன்பு அதாவுல்லா ஏன் ம‌வுன‌மாக‌ உள்ளார், எங்கே அவ‌ர் என‌ தேடிய‌வ‌ர்க‌ள். அதா,  ஆளுந்த‌ர‌ப்பாக‌ இருந்தும் முஸ்லிம் ம‌க்க‌ள் அதிகார‌ம் எதுவும் இல்லாத‌ நிலையிலும் இது விட‌ய‌த்தை தைரிய‌மாக‌ ம‌ஹிந்த‌ முன் பேசிய‌தை எந்த‌வொரு முஸ்லிம் பிர‌திநிதியும் பாராட்டிய‌தை காண‌வில்லை.

அதாவின் கோரிக்கை நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌மைக்கும் கார‌ண‌ம் முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ள் மீதான‌ அவ‌ந‌ம்பிக்கையாகும். ம‌ஹிந்த‌ அதாவுக்கு எக்க‌ச்ச‌க்க‌மாக‌ உத‌வி செய்தார். அதாவால் அக்க‌றைப்ப‌ற்று வ‌ள‌ம் க‌ண்ட‌து. சாய்ந்த‌ம‌ருது, க‌ல்முனைக்குடி, ம‌ருத‌முனை வ‌ளம் க‌ண்ட‌து. ஆனாலும் 2015 தேர்த‌லில் இம்ம‌க்க‌ள் ம‌ஹிந்த‌வையும் அதாவுள்ளாவையும் நிராக‌ரித்து ச‌மூக‌த்துக்கு எந்த‌ உருப்ப‌டியான‌ ந‌ன்மையும் செய்யாத‌ ஹ‌க்கீமுக்கும் ஐ தே க‌வுக்குமே ஓட்டுக்க‌ளை அள்ளி போட்ட‌ன‌ர்.

ஒரு அர‌சிய‌ல்வாதி எப்போதுமே த‌ன‌க்குரிய‌ ஓட்டு ப‌ற்றியே சிந்திப்பான். ஓட்டு கிடைக்கும் என்றால் எதையும் கொண்டு வ‌ந்து கொட்டுவான். ஓட்டு கிடைக்காது என்றால் த‌ன் சொந்த‌ ச‌கோத‌ர‌னையும் வெறுப்பான். இதுதான் அர‌சிய‌ல் ய‌தார்த்த‌ம்.

முஸ்லிம் ச‌மூக‌ம் இந்த் ய‌தார்த்த‌தை இன்னும் ப‌டிக்க‌வில்லை. இத‌னால் மேலும் மேலும் இன்ன‌ல்க‌ளையே அனுப‌விக்கிறோம்.

2015ல் 99வீத‌ முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்டும் ந‌ன்றி கெட்ட‌ அர‌சாங்க‌த்தை முஸ்லிம்க‌ள் க‌ண்ட‌ன‌ர். ம‌ஹிந்த‌வுக்கு இன்று வ‌ரை 20 வீத‌த்துக்கு மேல் முஸ்லிம்க‌ள் ஓட்டு போட்ட‌தில்லை. 

இந்த‌ நிலையில் அதாவுள்ளாவின் இந்த‌ முய‌ற்சி என்ப‌து கோடி சிங்க‌ள‌வ‌ரையும் எதிர்த்து நிறைவேற்ற‌ வேண்டிய‌ ஒன்று. அத‌னை நிறைவேற்றினாலும் முஸ்லிம்க‌ளின் ஓட்டு ஒன்று கூட‌ த‌ம‌து அர‌சுக்கோ அல்ல‌து அதாவுக்கோ அதிக‌ரிக்காது என்ப‌து அர‌சுக்கு தெரியும். இதுதான் அதாவின் கோரிக்கை ஒதுக்க‌லுக்கு கார‌ண‌மாகும்.

ஆக‌வே நாம் அர‌சை விம‌ர்சிக்கும் ந‌ம்மை நாம் சிந்திப்போம். கிழ‌க்கை விடுவித்து, புலிக‌ளை ஒழித்து, வ‌ட‌க்கு கிழ‌க்கை பிரித்து, கிழ‌க்குக்கான‌ மாபெரும் அபிவிருத்திக‌ளை செய்து, மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ம், ப‌ட்ட‌தாரி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்கி இப்ப‌டியான‌ ர‌ணில் ச‌ஜித்தால்   முடியாம‌ல் போன‌ பாரிய‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை செய்த‌ ம‌ஹிந்த‌வுக்கு ந‌ம்மில் எத்த‌னை பேர் ந‌ன்றிக்க‌ட‌னை செய்துள்ளோம் என்று சிந்திக்க‌ வேண்டும்.

இப்போதுள்ள‌ அர‌சு 98 வீத‌ம் சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சு. அந்த‌ அர‌சை ந‌ம‌க்கு சாத‌க‌மாக‌ மாற்றுவ‌து எப்ப‌டி என்று சிந்திப்ப‌துதான் புத்திசாலித்த‌ன‌ம். அத‌ற்கு மாறாக‌ அர‌சையும் அர‌ச சார்பு முஸ்லிம் க‌ட்சிக‌ளையும் முஸ்லிம்க‌ள் தூற்றிக்கொண்டிருந்தால் அது மேலும் மேலும் அர‌சுக்கான‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் ஓட்டுக்க‌ளையே அதிக‌ரிக்கும்.

10 கருத்துரைகள்:

பொதுமக்களை குறை சொல்ல முடியாது .மஹிந்த குடும்பத்தினரை முஸ்லிம்களின் வாழ் நாள் எதிரி போல் காட்டி அவர்களை மூளைச்சலவை செய்தது ஹக்கீம் அவர்கள் தான் .

நீங்கள் தான் இருக்கிறார்கள் அவருக்கு அவருக்கு ஆதரவாக பேசுவதற்கு .
இந்த ஆட்சியில் யாருடைய பேச்சுக்கும் மரியாதை கிடையாது .
மரியாதை இல்லாத இடத்தில் உங்களுக்கு என்ன தேவை மெளலவி சாப் ???
சிந்தித்து பாருங்கள் கணக்கு செரியாக வரும்.

Jaffna Muslim please don’t publish like a idiot speech.தயவு செய்து இப்படியான பேச்சுக்களை பதிவேற்ற வேண்டாம்.பல ஆயிரம் வார்த்தைகளால் இந்த mr.முபாரக் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்.ஆனால் அவரை போல் நானும் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..

Yes. This is the true situation

begging politics not going from muslim community , not shame , donation for shinkales people , our people dirinking air

அப்ப ஏன் A .S. சொல்லியும் M.R. கேட்கவில்லை? No point of talking politics in this prevailing situation.

-all muslim , should read and understand quran version chapter 60 , please read allah what say for you about non muslim

இந்த அரசில் கோமாளிகளுக்கு அல்லாஹ் நல்ல உள்ளங்களை தந்திட பிராத்திக்கின்றேன்.இப்பயாவது உங்களுக்கு விளங்குதா? ரவூக் ஹக்கீம்,ரிஷாத்,ஹரீஸ்,ஆஷாத் ஷாலி,ஏன் இந்த இணவெறி சதிகார கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்றார்கள் என்று? காக்கா உங்கள் எல்லோருக்கும் விளங்கும் கொஞ்சம் சுனங்கும்.

மரணித்த முஸ்லிம்களை நல்லடக்கம்
செய்யும் விடயத்திலும் அரசியல் லாபமா?

அப்போ முஸ்லிம்கள் இவருகக்கு ஓட்டுப் போடாததுதான் முஸ்லிம் மையத்தை எரிக்கக் காரணம் எனக் கூற வருகிறீர்கள்.அப்போ நீங்கள் கூறிய காரணங்களால் முஸ்லிம்கள் அவர்களுக் இம்முறை வோட்டுப் போடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்.அவர்களோடு இருந்து அவர்க
ளின் சுயரூபத்தை எங்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.இதற்கு நாம் உமக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Post a comment