Header Ads



கொரேனா தொற்று உள்ளது என முகப்புத்தகத்திலோ, வட்ஸ்சப் குறூப்புகளிலோ தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை

- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்    காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக இரண்டு தினங்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கான எந்தவித அறிகுறியும் இல்லை என இரத்த பரிசோதனையில் அறியமுடிந்ததையடுத்து வைத்தியசாலையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார்

இவர் கொழும்பில் தனியார் தொழிற்சாலை ஒன்றில்  கடமையாற்றி வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோணா தொற்று பிரச்சனை காரணமாக வாழைச்சேனை பிரதேசத்துக்கு திரும்பிய நிலையில் சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தலுக்கு அமைய சுய தனிமைப்ப்படுத்தலில் இருந்தார்.

தனிமைப்படுத்தலில் இருந்து வந்த சில நாட்களில் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி சந்தேகத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கான எந்தவித அறிகுறியும் இல்லை என இரத்த பரிசோதனையில் அறியமுடிந்ததையடுத்து வைத்தியசாலையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார்

இவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் வாழைச்சேனை பிரதேசத்தில் பெரும்பாலான மக்கள் பயத்தின் மத்தியில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை சுயதனிமைப்படத்தலில் உள்ளவருக்க கொரேனா தொற்று உள்ளது என்றும் குறித்த நபர் மீது பொய்யான தகவல்களை முகப்புத்தகத்தில் அல்லது வட்ஸ்சப் குறூப்புகளிலோ வெளியிடுபவர்கள் தொடர்பாக கண்டு பிடிக்கப்பட்டால் சுகாதா வைத்தியஅதிகாரிகள் அலுவலகத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.