Header Ads



இனவாதமற்றவர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள், எப்படிச் சுட்டிக் காட்டுகிறார்கள் என்று பாருங்கள்.

தான் வெளிநாட்டில் இருந்து வந்த விடயத்தை வேண்டும் என்றே மறைத்து தனக்கு நெஞ்சு வலி என சொல்லி ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். நோயாளியின் உறவினர்களின் மூலம் உண்மையை வைத்தியர்கள் அறிந்துகொள்கின்றனர். அத்துடன் அந்த நோயாளி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் என கண்டுபிடிக்கப்படுகிறார். அதன் காரணமாக அந்த மருத்துவ விடுதியில் (ward) வேலை செய்த வைத்தியர்கள், தாதிகள் என அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டி வந்தது. அதுதான் இலங்கையில் ஒரு நோயாளி தகவல்களை மறைத்து வைத்தியசாலையில் அனுமதி பெறும் முதல் சம்பவம். ஆனால் அந்த சம்பவம் ஒரு சம்பவமாகவே வெளி வந்தது. அவரின் பெயர், ஊர், இனம் எதுவும் வெளியாகவில்லை. அவர் Patient X அவ்வளவு தான். எந்த வைத்தியரோ தாதியோ அல்லது அங்கு வேலை செய்யும் வேறு யாரோ தனது இனத்தவன் இப்படி செய்து விட்டானே, தனது இனத்துக்கே இழுக்கு, தாம் எப்படி மற்றவர்களுக்கு முகம் கொடுப்பது என்று யாரோ செய்த தவறை தன் தலையில் போட்டுக் கொண்டு அழவில்லை. அந்தத் தவறை செய்தவரை ஒரு தனி மனிதனாகவே பார்த்தனர். அவரைத் திட்டித் தீர்த்தனர். அவ்வளவு தான்.

ஹோமாகமை வைத்தியசாலையில் வைத்தியக் கண்கானிப்பில் இருந்த நோயாளி ஒருவர் தப்பித்துச் செல்கிறார். அதற்காக அவரின் இனத்தவர்களோ அல்லது அவரின் ஊரவரோ “எங்கடவனத் திருத்தேலா, எங்கடவன் தான் இப்படி செய்றாங்க, மத்தவர்கள் இப்படியா?” என தேவையில்லாமல் தன் இனத்தை சுய விமர்சனம் என்ற பெயரில் முழு சமூகத்தையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தவில்லை. ஏதோ ஒரு covidiot இப்படி செய்திருக்கிறானே என்று கோபத்தை வெளியிடுவதுடன் முடிந்தது.

சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடச் சொல்லி அதிகாரிகள் சொல்லும் பொழுது அப்படி செய்ய முடியாது என அதிகாரிகளுடன் சண்டை பிடிக்கிறான் ஒரு covidiot. அந்த இனத்தவர்கள் "ஏன் எங்கடவன் மட்டும் இப்படி நடக்கிறார்கள்” என்று தன் பிரஷரை ஏற்றிக் கொள்ளவில்லை.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் பட்ட பொழுது முழு இலங்கையிலும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது “எங்கட சமூகம் சட்டத்தை மதிப்பதில்லை” என்று தன் இனத்தவர்கள் மட்டும் இருக்கும் போட்டோக்களைப் போட்டு அல்லது தன் இனத்தவர்கள் பிழை செய்வதையும், ஏதோ ஒரு இடத்தில் மக்கள் சமூக இடைவெளியைப் பேணி பொருட்கள் வாங்கும் பொழுது அதில் எத்தனை பேர் தம் சமூகத்தவர்கள் இருந்தார்கள் என்பதும் தெரியாமல் மற்றவர்கள் எவ்வளவு நன்றாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று “சமூகத்தைத் திருத்துகிறோம்” பேர்வழியாகவன்றி மாறாக ஏன் மக்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று மூன்றாம் மனிதர்களாகவே பார்த்தார்கள்.

இப்படி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பொழுது பார்ட்டி வைத்தவர்கள், கூட்டாகச் சேர்ந்து போதைப்பொருள் பாவித்தவர்கள், கூட்டாகச் சேர்ந்து விளையாடியவர்கள் என பெரியதொரு பட்டியலையே இடலாம்.

இத்தனைக்கும் "ஏன் உங்கள் இனத்தவர்கள் இப்படி செய்கிறார்கள்?" என்று கேட்டுப் பாருங்கள், அதை நியாயப்படுத்தவும் போக மாட்டார்கள், குற்ற உணர்வுடன் அதற்காக வருந்தவும் மாட்டார்கள். யாரோ ஒரு கழுதை செய்ததற்கு தான் பதில் சொல்லத்தேவையில்லை என்று முகத்தில் அடித்தால் போல் சொல்லி விடுவார்கள்.

மற்றவர்கள் மீது நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டு யாரோ ஒருவர் செய்த குற்றத்துக்கு சமூகத்தையே குறை சொல்கிறார்கள் என்பது. ஆனால் நாமும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம். யாரோ ஒருவர் குற்றம் செய்து விட்டால் அதற்கு முழு சமூகமும் பொறுப்பு போல் நினைக்கிறோம், அதற்கு நாம் பதில் சொல்லவேண்டியவர்களாக நினைக்கிறோம். மற்றவர்கள் செய்யும் தவறு தனிமனிதனின் தவறாக நோக்குவதற்குப் பக்குவப்பட்ட நாம் எம் சமூகத்தில் ஒருவர் தவறு செய்துவிட்டால் அவரைத் தனிமனிதராகப் பார்க்க முடிவதில்லை. முதலில் உண்மையில் அவர் தவறு செய்தாரா என்று கூட பார்ப்பதற்கு பொறுமையில்லாமல் சமூகத்தின் மீது ஆத்திரத்தையும் கவலையையும் கொட்டி WhatsApp மெசேஜ்கள் பரவுகின்றன. நாமே தனிமனிதத் தவறுகளுக்கான பொறுப்பை சமூகத்தின் மீது சுமத்திவிட்டு மற்றவர்களைப் பார்த்து தனிமனிதர்களின் குற்றத்துக்கு முழு சமூகத்தின் மீதும் குறை சொல்லாதே என்று எப்படி சொல்ல முடியும்? அப்படிச் சொல்வதற்கு எமக்கு என்ன தகுதி இருக்கிறது? இது உயர் மட்டம் முதல் சமூகத்தின் அடிமட்டம் வரை உள்ள பிரச்சினை தான். இந்நிலைமையை நாம் மாற்றவேண்டும். இத்தோல்வி மனப்பான்மையில் இருந்து வெளிவரவேண்டும்.

அடுத்தது நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து இனத்திலும் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள். அதை நாம் இனங்களுக்கோ ஊருக்கோ பிரதேசத்துக்கோ உள்ள பிரத்தியேக இயல்பாக பார்க்க வேண்டியதில்லை.

ஏன் பிழைகளைச் சுட்டிக் காட்டக் கூடாதா என்று நீங்கள் கேட்களாம். கட்டாயம் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். மக்கள் அறிவூட்டப்படத்தான் வேண்டும். ஆனால் அது யாதார்த்தத்தைப் புரிந்ததாக இருக்கவேண்டும். அதற்கு சகோதர இனத்தவர்கள் அவர்களின் இனத்தவர்கள் செய்யும் தவறை எவ்வாறு நோக்குகிறார்கள் எவ்வாறு சுட்டிக் காட்டுகிறார்கள் என்று பாருங்கள். அல்லது எம் இனத்தவர் செய்யும் தவறை இன ரீதியாக நோக்காத, இனவாதமற்றவர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் எப்படிச் சுட்டிக் காட்டுகிறார்கள் என்று பாருங்கள். அதில் நல்ல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

Shafraz Buhary

10 comments:

  1. Yes, good point. We should think about it

    ReplyDelete
  2. யதார்த்தமான கருத்து. நன்றி!

    ReplyDelete
  3. தெளிவான பார்வை...

    நம்மில் சிலர் "அவர்களின்" கால்களில் விழுந்தால், அல்லது "அவர்களுக்கு" கொட்டிக்கொடுத்தால், அவர்கள் நம்மை விட்டுவிடுவார்கள் என நினைக்கின்றார்கள்!

    அந்தோ பரிதாபம்! அல்லாஹ் (குறிப்பாக இக்காலத்தில் ) அவர்களைப்பற்றி என்ன சொல்லியுள்ளான் என்பதை பலர் அறியாமலும், சிலர் அறிந்தும் உணராமலும் இருப்பது "ஈமானின் பலவீனத்தை" உணர்த்துகிறது.

    ReplyDelete
  4. Very good article. Someone could translate it in Sinhala.

    ReplyDelete
  5. Mr.Shafraz buhary.
    Well done. Really fact.
    எம்மவர்கள் முதலில் முட்டி மோதிக்கொண்டு "சி" க்கு. பாஞ்சு குடுத்து கொண்டு வாழ் பிடிக்க போறதுததான் காரனம். படைத்த அல்லாஹ் ஒருவனை திருப்தி படுத்த முயலாமல் அற்ப மணிதர்களை திருப்தி படுத்த முனைவது.சிறந்த முஸ்லீம் தன்னுடைய கைகளை கொண்டும் நாவை கொண்டும் மற்றைய பிற முஸ்லீம் சகோதரகளை துன்புறுத்தாமல் இருப்பவனே.

    ReplyDelete
  6. Publish this in sinhala please.

    ReplyDelete
  7. Fully agreed with Shafraz bukhary..

    1st of all many of do have to come of this ill mentality considering 3rd class status.

    Many keep blaming ourselves due to their weakness in hearts. Even when go to debate with these Racist Chennels, they failed to point out the mistake done by Chatura face to face... Rather they simply answer his arrogant questions that are desgined to belive as all muslims community making mistake.

    Our participant should question him for his racist behaviour, should ask him to applogies for generalizing an issue to whole society. Also make him accept that their media frighten public about corona and that made many people not to go hospital. so on...

    Unfortunately our weak 3rd class mentality has to be removed 1st.

    May God help us talk straight forward as a brave srilankan.

    ReplyDelete
  8. ஆமாம் எம்மில் பல அவசரக்குடுக்கைகள் உள்ளனர். அவர்கள் தம்மைத் தாமே பெரும் சமூக ஆர்வலர்களாகக் கற்பனை செய்து கொண்டு சமூகத்தை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்

    ReplyDelete
  9. உண்மையில் நீங்கள் சொல்வது ரொம்ப சரி ஆனால் எமது மார்க்கம்(இஸ்லாம்) சொல்லித்தந்தது போன்று வேறு எந்த மார்க்கமோ, அமைப்போ தனி மனிதனின் சுதந்திரம்(உரிமையை)பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை அது மட்டுமல்ல ஒரு சமூகத்துடன் ஒரு தனிமனிதனின் உயிரை சமப்படுத்தி அவனின் உயிரை காக்க சொன்ன மார்க்கம் எங்களது மார்க்கம் ஆகவே மார்க்கம் தெரியாதவர்களாக நாம் இருப்பதினால் தான் எமக்கு இந்த நிலை முற்போக்குள்ள முன்மாதித்திரியான சமூகம் இஸ்லாமிய சமூகம், துரதிஷ்டம் சொல்லியும் விளங்காத சமூகமாக இருக்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.