Header Ads



ரோபோ வடிவில், வரவிருக்கும் ஒரு பேரபாயம்

உலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்க, இதையெல்லாம் சமாளித்துவிடலாம் எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள். பணியிடங்களில் மனித ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ரோபோக்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் தாக்கம் குறித்து பல புத்தகம் எழுதி இருக்கும் மார்ட்டின் ஃபோர்ட், உரையாட சக மனிதன் தேவை என்ற நிலையை கொரோனா மாற்றி இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். கொரோனா காரணமாக இப்போதே பல நிறுவனங்கள் ரோபோக்களை பணியமர்த்தத் தொடங்கிவிட்டன. வால்மார்ட் தரைகளைச் சுத்தப்படுத்தவும், தென் கொரியா கைகளை சுத்திகரிக்க சேனிடைசர் வழங்கவும் ரோபோக்களை பயன்படுத்துகின்றன.

2021ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் இந்த சமயத்தில் பல இடங்களில் ரோப்போக்களின் பயன்பாடு அதிகமாகும், இது எதிர்காலத்தில் பெரும் சவாலாகவும், பேரபாயமாகவும் அமையும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள். BBC

No comments

Powered by Blogger.