Header Ads



முஸ்லிம் அரச ஊழியர்கள் நோன்பு, காலங்களில் வழிபாடுகளில் ஈடுபட விஷேட ஏற்பாடுகள்.

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் அரச திணைக்களங்கள்,அரச கூட்டுத்தாபனங்கள்,மற்றும் நியதிச் சட்ட சபைகளில் பணியாற்றும் முஸ்லிம் அரச ஊழியர்கள் வழமையாக நோன்பு காலங்களில் விஷேட ஏற்பாடுகளின் கீழ் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஒழுங்குகளை செய்து வந்த நிலையில் இவ்வருடம் கோவிட் 19 தொற்றுக் காரணமாக அந்த ஏற்பாடுகள் குறித்த சுற்று நிருபம் உரிய அரச துறைகளுக்கு அனுப்பப்படாமல் இருந்து வந்தது.

இதனால் முஸ்லிம் அரச ஊழியர்கள் நோன்பு கால விஷேட வழிபாடுகளை நிறைவேற்றுவதில் பல்வேறு பட்ட அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இது குறித்து முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான்  அவர்களிடம் அரச ஊழியர்கள் தமது அசெளகரியங்களை எடுத்துக் கூறியதுடன் அரச மேல் மட்டத்துடன் பேசி இதற்கான தீர்வினை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து  பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கெளரவ ஜானக பண்டார தென்னக்கோன் மற்றும் அமைச்சின் செயலாளர்  ஆகியோரிடம் தொடர்பு கொண்டு  கெளரவ காதர் மஸ்தான் அவர்கள்  விடுத்த வேண்டுகோளையடுத்து நாட்டில் பணியாற்றும் முஸ்லிம் அரச ஊழியர்கள் நோன்பு காலங்களில் தினமும் குறுகிய விடுமுறைகளைப் பெற்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட அனுமதியளிக்குமாறு 09/2020 எனும் இலக்கம் கொண்ட 29.04.2020 திகதியிடப்பட்ட பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின்  சுற்று நிருபம் ஒன்று  உரிய உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகள் தொடர்பில் பின்வருமாறு குறுகிய விடுமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

01)
முற்பகல் 03.30 மணி தொடக்கம் முற்பகல் 06  மணி வரையும்.

02)
பிற்பகல் 03.15மணி தொடக்கம் பிற்பகல் 04.15 மணி வரையும்.

03)
பிற்பகல் 06.00 மணி தொடக்கம் பிற்பகல் 07.00  மணி வரையும்.

04)
பிற்பகல் 07.30 மணி தொடக்கம் முற்பகல் 10.30 மணி வரையும்

என இவ் விஷேச வழிபாட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையையிட்டு அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எனது நன்றிகளைபும் தெரிவித்தார். 

ஊடகப்பிரிவு.

1 comment:

  1. நோன்பு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே இந்த சுற்றுநிருபம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மூலம் அனைத்து அரச நிறுவனங்கள், திணைக்களங்கள்,கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவது தான் வழக்கம். சிலவேளை இம்முறை கோவிட் பிரச்சி​னைகள் காரணமாக தாமதமாகி அல்லது கவனமின்றி இருந்திருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.