Header Ads



இத்தாலிக்கு உதவி செய்ய முடியாமல் போனதற்கு, ஐரோப்பிய ஆணைக்குழு மன்னிப்புக் கேட்டது

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஆரம்பக்கட்டத்திலேயே உதவி செய்ய முடியாமல் போனதற்கு, இத்தாலியிடம் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

நேற்றைய தினம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆணைக்குழுவின் தலைவர் உர்சலா வான் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

இத்தாலியில் கொரோனா தொற்று ஆரம்பகட்டத்தில் இருந்த போது, பலரும் அந்நாட்டுடன் துணை நிற்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அத்துடன் இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது அதை எதிர்கொள்ள, நாங்கள் யாருமே தயாராக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்காவிற்கு அடுத்து அதிகபடியானோரை பலி கொடுத்த நாடு இத்தாலி தான். அங்கு இதுவரை, ஒன்றரை லட்சம் பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 21,645 பேர் உயிரிழந்துள்ளனர். 38,092 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இத்தாலிக்கு ஐரோப்பிய ஆணைக்குழு ஆரம்பத்திலேயே உதவாமல், இப்போது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளது ஆரோக்கியமானது தான் எனத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் உதவி இருந்தால், பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அப்போதே ஐரோப்பிய நாடுகள் உதவியிருந்தால், வைரஸ் பாதிப்பும் உயிரிழப்புகளும் குறைந்திருக்கக் கூடும். நாங்கள் ஆரம்பகட்டத்தில் உதவ முடியாததற்காக, இத்தாலியிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவரது நாடாளுமன்ற உரைக்கு எதிராக இப்போது கேட்டுள்ள மன்னிப்பு, இழந்த உயிர்களை மீட்டுத்தராது’ என, சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தும் வருகின்றனர்.

No comments

Powered by Blogger.