April 07, 2020

அலி சப்ரியின் கரங்களை, முஸ்லிம் சமூகம் பலப்படுத்துமா...?

- Fazlin Wahid Mohamed -

இன்றைய நிலையில் இலங்கை முஸ்லிம்கள் சரியான ஒரு தலைமை இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதே ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் .நேற்று உலமா சபையினால் நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் மூன்று தினங்கள் மஃரிப் தொழுகையின் பின்னர் துவா பிரார்த்தனையை ஒலிபரப்புமமாறு  கேட்டுக்கொண்டிருந்தனர் .இன்று அது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டது என்ற செய்தி வைரலாக பரவியது. ஒரு இக்கட்டான நெருக்கடியான நிலையில் நாம் இருக்கும்போது ஒரு சபை எடுக்கும் முடிவை இன்னொரு சபை தடை செய்தது  பார்ப்பவர்கள் கண்ணில் எங்களுக்குள்ளே மோதல்கள் இருப்பதை தெளிவாக காட்டுகின்றது.

 இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சமூகத்தை வழி காட்டுவதற்கு ஒரு தலைமைத்துவம் இன்றியமையாததாகும். அது அரசியல், ஆன்மீக, சமூக விடயங்கள் அனைத்துக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். நாம் சிறுபான்மை இனமாக வாழும் ஒரு நாட்டிலே அரசு பொதுவாக எடுக்கும் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

 ஆனால் சமூகத்துக்கு என்று தனித்துவமாக எடுக்க வேண்டிய சில விடயங்களுக்கு எமக்குள்ளே ஒற்றுமையும் இணக்கப்பாடும் இன்றியமையாததாகும்.இன்றைய நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அரசியல் அதிகாரம் அற்ற தலைவர்கள் அற்ற ஒரு சமூகமாக நாம் இருக்கின்றோம்.  துரதிஷ்டவசமாக எமக்கென்று ஒரு அமைச்சரும் இல்லாத நிலையில் இருக்கின்றோம். அதிகாரம் கொண்டு அரசியல் தலைமை இருக்கும் என்றால் எல்லோரும் கட்சி பேதமின்றி அவரின் பின்னால் இவ்வாறான நிலைமையில் இருப்பார்கள் .

 நாம் யாரோ ஒரு பொருத்தமான நபரை தேர்ந்தெடுத்து அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த சமூக தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளாகி இருக்கின்றோம். முன்னே  வரும் காலம் இதைவிட இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப்படலாம்.

ஏற்றத்தாழ்வுகளையும் ,கட்சி அரசியலையும், பிரதேச வாதத்தையும் ஒரு புறம் தள்ளிவிட்டு ஒன்று சேர வேண்டும். 

 அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துப்போகும்  ஒருவரே தலைவராக இருப்பதும் அவசியமாக உள்ளது. தேர்தல் என்று ஒன்று வரும்போது சுயமாக தனி வழியே செல்லலாம். அந்த இடைவெளியை நிரப்புவதற்கு சகல விதத்திலும் பொருத்தமானவராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் இருக்கின்றார் என்பது என் அபிப்பிராயம்.

 காழ்ப்புணர்வு கொள்ளாது அவரின் கீழ் காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு செயல்படுவது அத்தியாவசியமாக உள்ளது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.  

இதைவிட, மொத்த சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவரை தெரிவு செய்வது சாத்தியமில்லை. ஆனால், இன்று இருக்கும் தலைமைத்துவங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமக்குள்ளே ஒரு தலைமைத்துவத்தை தெரிவு செய்து கொள்ளலாம். ஆனால், அவர் அதிகாரம் வாய்ந்த ஒருவராக அரசுடன் இணக்கப்பாட்டுடன் செயல்படும் ஒருவராக இருக்க வேண்டுமென்றால், அதற்கு பொருத்தமானவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் தான்.

அது  சாத்தியமற்றதாகிவிடும் எனின் நாட்டின் சகல பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த கூடியதாக அரசியலுக்கு அப்பால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபையை அவரே உருவாக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் பல பாகங்களில் பல்வேறு கிராமங்களில் இருக்கும் பிரச்சினைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் .அரசாங்கம் தனது கடமையை சரிவர செய்கின்றது . மக்களிடத்தில் எந்த பாரபட்சமும் இல்லாமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். என்றாலும் சமூகம் அவ்வப்போது ஆங்காங்கே எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளை சொல்வதற்கு தலைமைகளை கொண்டிருக்கின்றது. தமக்கு அரசியல் அதிகாரம் எதுவும் இல்லை என்ற காரணத்தினால் எமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் மௌனமாக இருக்கின்றார்களோ தெரியவில்லை .எனினும் காலத்தின் கட்டாயத் தேவை சமூகத்தை சகல விடயங்களிலும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைமைத்துவமே. அது தற்காலிகம் என்றாலும் சரி மிக விரைவாக இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டியது சமூகத்தின் அவசரமும், அவசியமுமான தேவையாகும்.

26 கருத்துரைகள்:

Some think smelling here.

தினைக்களம் அரச சார்பானது என்பதும் உலமா சபை அரச சார்பற்ற அமைப்பு என்பதும் இதன் மூலம் தெளிவாக தெரிகிறது எனவே உலமா சபை மட்டுமே முஸ்லிம்களின் தலைமை யாக இருக்க வேண்டும்... மற்றும் அரசியல் தலைமைகள் எந்த அலியாக இருந்தாலும் உலமா சபை க்கு கட்டுபட்டே இருக்க வேண்டும்... மையம் எரியூட்டல் விடயத்தில அலியின் திறமையை தான் பார்த்தோமே .... கட்டுரை யாளர் தேவையெனில் அலியை வைத்து கொள்ளுங்கள்..

உலமாக்களுக்கு தெரியாத இஸ்லாத்தை திணைக்களம் செல்லியிருக்கிறது.
றசூலுல்லாஹ் செய்யாததை செய்ய இவனுகளுக்கு என்ன தைரியம்?
இலங்கை முஸ்லிம்கள் பித்அத்தில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

Very good useful idea at this critical moment.

100% True.. He Should Be the Leader for Our Muslim Community. A Talented Person.

அலி சப்ரி சிங்கள பேரினவாத காட்சிகளில் தொழில்புரியும் ஒரு ஊழியன் மட்டுமே அவரால் அவர் கட்சிக்கு எதிராக என்றுமே செயற்படமுடியாது. பெருத்த இனவாதிகளான கம்பன்வில, விமல் போன்றவர்கள் இஸ்லாமிய விரோத கருத்தை முன்வைத்தால் ஏற்றுக்கொள்பவர் தான் இந்த அலி சப்ரி. இஸ்லாமிய ஜனாஸாக்களை சிங்கள இனவாதிகளின் சித்தாந்தத்தின்படி எரிக்கலாம் என்கிற நிலையிலிருக்கும் இந்த சப்பிரியை எப்படி முஸ்லீம் சமூகம் ஏற்றுக்கொள்ளும்? அவ்வளவு இழிவானதாகிவிட்டதா இந்த சமூகம். கட்டுரையாளர் வேண்டுமென்றால் சொந்த நலனுக்காக அவரும் அவர் குடும்பத்தாரும் இவரை ஏற்றுக்கொள்ளட்டும்.ஒட்டுமொத்தமாக முஸ்லீம் சமூகத்தையும் இவரை தலைவராக ஏற்றுக்கொள்ள சொல்ல என்ன தகுதியும் இல்லை

This is a good advice.

முதல்ல அட்டுலுகம எனும் ஊருக்கு உனவு கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லுங்கள் mr.fazlin.அடுத்தது முஸ்லிம் சமய திணைக்களம் தற்போது யாரின் கீழ் உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ளவும் கட்டுரை எழுதியவரே.அலி சப்ரி ஜனாதிபதிக்கு நெருக்கமாக இருந்தும் Muslim களுக்காக ஒரு சிறிய விடயத்தை கூட இன்னும் சாதிக்க ஏன் பேச கூட அவரால் முடியாத சூழ் நிலையிலும்,பயத்திலும் உள்ளா என்பது தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

உண்மை தான்.ஆனால் உங்கள் கருத்து அரசியலை மையப்படுத்தி நகர்கின்றது.

தலைமைத்துவம் என்பது நாளுக்கு நாள் மாற்றப்பட முடியாது. ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ நெருக்கமாயிருப்பது அல்லது ஆளும் கட்சியில், பாராளுமன்றத்தில் இருப்பது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டல்ல தலைமை தெரிவு செய்வது! அது மட்டுமல்ல தலைமை என்பது ஆடை மாற்றுவது போன்று நினைத்த நேரம் விரும்பியவர் விரும்பியவாறெல்லாம் மாற்ற முற்படுவதுமல்ல.
இறைத்தூதரிடம் அரசியல், ஆன்மிகம் ஆகிய இருவகை தலைமைத்துவமும் ஒருங்கே காணப்படும். சமூக மட்டத்தில் இருவகைத்தலைமைகளும் இணைந்து பயணிக்க வேண்டும். அதேபோன்று, இருக்கும் தலைமைகளிடம் தவறு காணப்பட்டால் சரிசெய்ய முயல வேண்டுமே தவிர நாளுக்கு நாள் மாற்றிக்கொண்டிருப்பதல்ல தீர்வு. அது மேலும் பல பிளவுகளுக்கே வழிகோலும் என்பதே இஸ்லாமிய அரசியலிலிருந்து நான் விளங்கியதாகும்.

அவ்வாறான தலைவர் பேரினவாதிகளால் தெரிவுசெய்யப்படாமல் மக்களின் ஆணையால் தெரிவாகவேண்டும் !

ஒரு மனிதரிடம் இஸ்லாம் எதிர்பார்க்கும் நடுநிலை தன்மை சகோதரர் சட்டத்தரணி அலி சபரி அவர்களிடம் காணக்கூடியதாக உள்ளது .எனவே இவர் சமூகத்துக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது

A very good idea, but will the Jaundised Muslim society accept such a proposal.

Next election la jvp atsiya pidicha nfg Abdul Rahman than enga thaliver next leader ab Rahman walga

JVP. சுய நலன் இன்றி செயற்படுபவர்கள். அவர்களை தெரிவு செய்தால் என்ன? கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்காக பல தடவைகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து இருக்கின்றனர்.

Leaders of a community can not be appointed.He has to earn the leadership through his service to the community.Mr Sabry is in the good book of the present rulers.Other than that he does not posses any other merit to call him a leader.When the opposition comes to power he will be on the wrong side.Then we have to go for another leader. A leader must be able to command the respect of every government. One must remember Ali Sabry is at the mercy of present rulers. Any government will listen to a person who can generate support of the voters. In other words he must have a few MPs under his command.That is the main qualification today for you to get the rulers listen to you. DOES Mr ALI SABRY HAVE THAT? Will it be possible for him in the near future?

உலமாக்கள் என்பர்கள் வேறு அரசியல்வாதிகல் வேறு. எவர் அல்லாஹ்வை மட்டும் அஞ்சி அல்லாஹ்வுக்காக தனது சமூகத்தை நேசிக்கின்றாரோ அவரே இந்த சமுதாயத்தின் தலைவர். மிகப் பிரதானமாக மார்கத்தில் முழுமையான அறிவு கொண்டவராக கண்டிப்பாக இருத்தல் வேண்டும். உலக அறிவு இருந்து மார்க்க அறிவில்லாதவர் நல்ல தலைவராக இருப்பதர்ரகான வாய்ப்பில்லை. சிறுபாண்மை சமூகம் வாழ்கின்ற நாட்டில் தலைவன் இவ்வாறுதான் இருக்க வேண்டும்.இப்படி ஒரு தலைவன் இருந்தால் அவரைப்பற்றி எழுதுங்கள்.

Political leaders such as Sir Razick Fareed, MHM Ashraff were elected through votes of the Muslims so they have done their service and still we remembered. But appointment politician always duty bond to their masters and they disappeared when they have no power.
Leadership of the Muslims should have a knowledge of Religion.

கோதாவுக்கு வோட் பண்ணாடி அம்மணக்கு கெடச்சும் என்று சொன்னவர் முஸ்லீம் சமூகத்தின் தலைவரை??

இதைவிட எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியஅ அரசியல்அதிகாரமும் கொண்ட அரசுடன் இணைந்து செல்லக்கூடிய தலைமைத்துவம் ஒன்று இருந்தால் சொல்லுங்கள். வெறும் விமர்சனங்களில் பயனில்லை. யாராவது இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும்

அலி சப்ரி அவர்களை தூற்றுபவர்களிடம் கேட்கிறேன்... அவர் தனியாளாக அரசின் பக்கம் இருந்து தன்னாளான முயற்சிகளை எடுக்கின்றார். அவர் ஒருவர் மட்டுமே இருக்கின்றார்.. நான் ஒன்றை மட்டும் கேட்கின்றேன். கடந்த அரசில் 21 பேர் இருந்தார்கள் எங்கள் பிரதிநிதிகள் என்று கூறிம்கொண்டவர்கள்.. திகனையில் அடிக்கும் போது என்ன சாதித்தார்கள்.. ஒருவர் அல்ல... 21 பேர் இருந்தார்கள்.. என்ன மயிரைப் பிடுங்கினார்கள்..

எல்லாருடைய கருத்துக்களையும் ஒரு புறம் வையுங்கள். Fazlin Wahid Mohamed "இன்றைய நிலையில் இலங்கை முஸ்லிம்கள் சரியான தலைமை இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்" என்று கோடிட்டுள்ளார். இது சரியான கண்டுபிடிப்பு. கலவிப் புலமிக்க, மககளின் ஆதரவினைப் பன்முறை செயலில் காட்டியவரகள்தான் இன்று முஸ்லிமகளுக்கான தலைமைத்துவத்தில இருக்கின்றனர். எனவே புதிய தலைமைகள் முஸலிம் சமூகத்தற்குத் தேவையில்லை. புதியவரகள் அரசியலுக்கு வந்து முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று விரும்பினால் இருக்கும் முஸ்லிம் தலைமைகளுடன் ஒன்று சேர்ந்து பணியாற்றுங்கள். அதிலும் திருப்தி அடையாவிட்டால் விருப்பமான ஏதாவது ஒரு மாவட்டததில் தேர்தலுக்கு நின்று வென்று காட்டி அரசியலில் தலைமைக்கு வாருங்கள். இதுவே சரியானதும் முறையானதுமான வழிகாட்டலாகும. முந்திய தலைவரகளின் நிலைப்பாடுகளும் இதுவாகவே இருந்தது.

Post a Comment