Header Ads



சரணாகதி அரசியலுக்கு சம்மதிக்காதவரை ஹக்கீம், ரிஷாத், ஹிஸ்புழ்ழாஹ்வுக்குமான ஆதரவும் பிரார்த்தனையும் தொடரும்

ரஊப் ஹகீமின் அரசியல் நிலைப்பாடுகளை என்னைவிட அதிகமாய் வேறொருவர் விமர்சித்திருக்க முடியாது

எனது அதிருப்திகளின் முதற்காரணம் நான் 80களில் கண்ட அந்த துணிகரமான ஹகீமை இப்போது காண முடியவில்லை என்பதுதானே தவிர அவர் மீது வேறெந்த கோபமும் இல்லை.
ஈஸ்தருக்கு பின்னர் தோற்றுவிக்கப்பட்ட அச்சுறுத்த்ல்களை ஹகீம் கையாண்ட விதம் போற்றத்தக்கது மட்டுமல்ல வியக்கத்தக்கதும்தான்.

சரணாகதி அரசியலுக்கு தயாரில்லை எனும் ஹகீமின் நிலைப்பாட்டில் எமக்கு பூரண திருப்தியுண்டு.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இரண்டே இரண்டு முகங்களை கொண்டவையே.

ஒன்று சரணாகதி அரசியல்
அடுத்தது சம அந்தஸ்த்துக்கான அரசியல்.

TBஜாயா, சேர் ராஸீக் பரீட், பதியுதீன் மஹ்மூத், MHMஅஷ்ரஃ, ரஊப் ஹகீம்,  ரிஷாத் பதியுதீன், 
ஹஸன் அலி, ஹிஸ்புழ்ழாஹ் போன்றோர்கள் சரணாகதி அரசியலுக்கு சம்மதிக்காதவர்கள்.

ஒவ்வொருவரின் அணுகுமுறைகளில் வித்தியாசமுண்டு.
அவர்கள் சார்ந்துள்ள,சார்ந்திருந்த தேசிய கட்சிகளும் வேறானவை
அவற்றின் மீதெல்லாம் எமக்கும் விமர்சனங்களுமுண்டு.

ஆனால் அவர்களின் நிலைப்பாட்டில் எமக்கு பூரண உடன்பாடுண்டு.

எதிர்த்துப்பேசக்கூடாது என எச்சரிக்கும் பாஷிசத்தை எதிர்ப்பது ஜனநாயகத் தலைமைகளுக்கு அவசியமான பண்பு.

புதிய பாராளுமன்றத்தை மூன்று மாதங்களுக்குள் கூட்ட வேண்டும் என்பதற்கிணங்க ஜனாதிபதியால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி; தேர்தல் ஆணையாளரினால் ஒத்திப்போடப்பட்ட தேர்தல் திகதி பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியால் செல்லுபடியற்றதாகின்றதா?

மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்ட முடியாமல் போகும் பட்ஷத்தில் மாற்று வழி என்பது அரசியல் யாப்பில் கூறப்படாமையால் மேற்சொன்ன வர்த்தமானிகளின் செல்லுபடித்தன்மையில் சர்ச்சைகள் சட்டக்களத்தில் தோன்றியுள்ளது.

சட்டத்தரணிகள் என்ற வகையில் திரு சுமந்திரனும் ஹகீமும் இவ்விடையங்களில் கரிசனை காட்டுகிறார்கள்,கருத்துக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் அவர்களுக்கு பூரண உரிமையுண்டு.
சட்டத்தரணிகள் என்ற ரீதியில் விஷேட தகுதியுமுண்டு.

முஸ்லிம்களுக்கு சிரமங்கள் வந்தபோது கோட்டுக்கு ரென்றாரா? கறுப்புக்கோட் காணாமல் போனதா? என்பதெல்லாம் சிறு பிள்ளைத்தனமான விவாதங்கள்.
ஒவ்வொன்றும் வெவ்வேறான பரிணாமங்களை கொண்டவை.

சரணாகதி அரசியலுக்கு சம்மதிக்காதவரை ஹகீமுக்கும் ரிஷாத்துக்கும் ஹிஸ்புழ்ழாஹ்வுக்குமான எமது ஆதரவும் பிரார்த்தனையும் தொடரும்.

அடிபடத்தயார்
எல்லை தாண்டினால் பதிலடி கொடுக்கவும் தயார்
ஆனால் அடிமைப்பட தயாரில்லை என்பதே சிறுபான்மைகளின் ஏக நிலைப்பாடாய் இருக்க வேண்டும்.

அச்சம் என்பது மடமை

-வஃபா பாறுக்-

4 comments:

  1. ஊடகங்கள் மூலம் முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்படுகின்றார்கள் .இந்த அரசியல்வாதிகள் அதிகார உச்சத்தில் இருந்த போது முஸ்லிம்களுக்கான தனியான தொலைகாட்சி அலைவரிசையை செய்ய முடியாதவர்கள் இனிமேலும் எதனை சாதிக்கப்போகின்றார்கள் .

    ReplyDelete
  2. உங்கள் கூற்று சரியாக இருந்தாலும் சில வேளைகளில் அரசியல் தந்திரங்களையும் பாவிக்க வேண்டும்। கத்தியை மட்டுமல்ல புத்தியையும் தீடட வேண்டும்।

    ReplyDelete
  3. முஸ்லிம் அரசியல்வாதிகள் என்றால் அதற்கென தனித்துவமும் மகத்துவமும் உண்டு.ஆனால் எடுத்த எடுப்பிலேயே பதவிக்காகவும் பணத்திற்காகவும் சமூகத்தை கைகழுவிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருக்க அத்தனையையும் வசதியாக மறந்துவிட்டு நீண்ட தூக்கத்தில் இருந்து எழுந்து உளறுவது அவ்வளவு பொருத்தமாக இல்லை.
    ஆட்சியாளர்கள் இவர்களை இனி உள்வாங்குவதில்லை என்ற நிலைக்கு வந்த பின்னர், இனி முஸ்லிம்களில் விற்பதற்கான பண்டம் எதுவுமில்லை என்றான பின்னர் சரணாகதி அரசியலுக்கு தயாரில்லை என்பது நகைப்புக்குரியது.
    எதிர்வரும் தேர்தலில் மொட்டு கட்சிக்கு 2/3 பெரும்பான்மைக்கு 4 அல்லது 5 members தேவையென்றால் திரைமறைவில் நான் முந்தையா நீ முந்தையா? என்று சமூகத்தை ஏறி மிதித்துவிட்டு ஓடுவதற்கு தயாராகவே இவர்கள் இருக்க பாறூக் படங்காட்டுகிறார்.
    புளித்துப்போன புளியாணங்களுக்கு வக்காளத்து வாங்குவதற்கு இந்த நோன்பு காலத்தில் எவ்வாறு மனது வந்தது? இவ்வாறு சமூகத்தை நட்டாற்றில் விடுகின்ற, சமூகத்தை காட்டிக் கொடுக்கும் எச்செயலிலும் ஈடுபடமாட்டோம் என இவர்களால் இந்நோன்பு காலத்தில் சத்தியம் செய்ய முடியுமா?
    மருதை மரத்தில் காய் தின்னுவதும் பின்னர் கசப்பு என்று ஓடுவதும் மீண்டும் அதே மரத்தில் குரங்காட்டம் தாவி ஏறுவதும் சமூகத்திற்கு கசப்பாயினும் கை உயர்துவதுமாக நீங்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமா?
    சமூகத்தின் பெயரால் விற்றுவாங்கியவை அத்தனையும் போதும் தயவு செய்து விட்டுவிடுங்கள்.
    இனிவரும் காலத்தில் நாம் அனுபவித்த பின்வரும் உரிமைகளில் சிறு கீறல் விழுந்தாலும் அத்தனைக்கும் நீங்களே பொறுப்பு என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
    1 நோன்புகால விடுமுறை
    2 இத்தா காலம்
    3 ஹஜ் உம்றாவுக்கான விடுமுறை மற்றும் சலுகைகள்
    4 வெள்ளிக்கிழமையில் விசேட சலுகை
    5 மத்ரசாக்கள் தொடர்பான வரையறை
    6 பள்ளிகள் தொடர்பான வரையறை
    7 பாங்கு சொல்வது
    8 முஸ்லிம்களின் ஆடை
    இன்னும் எத்தனையோ?
    அல்லாஹ் பாதுகாப்பானாக!

    ReplyDelete

Powered by Blogger.