Header Ads



சர்வதேச யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஐநா முயற்சி - அமெரிக்காவும், ரஸ்யாவும் தடை


கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதற்காக சர்வதேச யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் ஐநாவின் முயற்சிகளிற்கு அமெரிக்காவும் ரஸ்யாவும் தடை போடுகின்றன என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக அரசாங்கங்கள் ஆயுதக்குழுக்கள் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரும் மோதல்களை முடிவிற்கு கொண்டுவரவேண்டு;ம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் ஒரு மாதத்திற்கு முன்னரே வேண்டுகோள் விடுத்திருந்ததை கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரிட்டன் பிரான்ஸ் ஜேர்மனி உட்பட பல நாடுகளும்  மனித உரிமை அமைப்புகளும்  பரிசுத்த பாப்பரசரும் இதற்கு ஆதரவளித்துள்ள போதிலும் டிரம்ப் நிர்வாகம் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது என  கார்டியன் தெரிவித்துள்ளது.

இந்த முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றுவதற்கான தீர்மானமொன்றின் நகல்வடிவை உருவாக்கியுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நகல்வடிவ ஆவணம் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் வேண்டுகோளை வரவேற்றுள்ளதுடன் அதற்கு; ஆதரவை வழங்கும் விதத்தில்  காணப்படுகின்றது.

முழுமையான யுத்த நிறுத்தத்தின் காரணமாக பயங்கரவாத அமைப்புகளிற்கு எதிரான தங்கள் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை, பென்டகன், இராஜாங்க திணைக்களம் ஆகியவை கருதுவதன் காரணமாகவே அமெரிக்க  அதனை எதிர்க்கி;ன்றது என கார்டியன் தெரிவித்துள்ளது.

ரஸ்ய ஜனாதிபதியும் இதே போன்ற கருத்தினை கொண்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ரஸ்யா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ,மறைமுக குழுக்கள்,மற்றும் ஆயுத குழுக்களிற்கான ஆதரவு பாதிக்கப்படும் என புட்டின் கருதுவதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

இருநாடுகளும்  சர்வதேச போர்நிறுத்தம் காரணமாக வெளிநாடுகளில் சட்டபூர்வமான இராணுவநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தங்கள் முயற்சிகள் பாதிக்கப்படலாம் என அச்சம் கொண்டுள்தாக பொரின் பொலிசி சஞ்சிகையின் விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

சர்வதேச யுத்தநிறுத்தம் காரணமாக இஸ்ரேல் மத்தியகிழக்கில் இராணுவநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலை பாதிக்கப்படும் என அமெரிக்கா கருதுவதாக  பொறின் பொலிசி குறிப்பிட்டு;ள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

மேலும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்களையும் -ஈரானின் இராணுவதளபதிகளையும் இலக்கு வைப்பதற்கான சுதந்திரம் அவசியம் என  டிரம்ப் நிர்வாகம் கருதுகின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது.

3 comments:

  1. They didn't realize their foolishness yet? not got lesson from corona??

    ReplyDelete
  2. இந்த அமெரிக்கர்கள் பூமியில் வாழும்மக்களை கொலைசெய்து அவர்களின் செல்வங்களை கொள்ளையடிப்பதில் குறியாக இருக்கின்றான் இதனால் அல்லாஹு அவர்கள் அவர்கள் போன்றோருக்கு ஒரு கிருமிமூலம் படிப்பினை பெறும்படி எச்சரித்துள்ளான்

    ஆனால் இவர்கள் திருந்தமாட்டார்கள்!

    இதைவிடவும் ஆபத்தான கிருமிகள் இவர்களை கொலைசெய்யும்

    ReplyDelete
  3. Do you know how many muslims died for Covid 19 In US???
    Do you know many SriLankan muslims died in US for Corona?
    Do not blame Americans for everything. Blame politicians...
    We have more freedom to practice Islam in US than SriLanka or India.

    ReplyDelete

Powered by Blogger.