Header Ads



துருக்கியின் மனிதாபிமானம் - பிரித்தானியாவுக்கு விமானம் முழுவதும் அவசர உபகரணங்களை அனுப்பியது

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 9000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், அரசு உயிரிழப்பை தவிர்ப்பதற்காக போராடி வரும் நிலையில், துருக்கி அரசு விமானம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் உயிர்காக்க பயன்படும் உபகரணங்களை நன்கொடையாக கொடுத்து உதவியுள்ளது.

கொரோனாவால் பிரித்தானியாவில் உயிரிழப்புகள் 10,000-ஐ நெருங்கி வருகிறது.

இதனால் நோயை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு இன்னும் சில நாட்கள் நீடிக்கப்படலாம் மக்கள் வீட்டிலே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் பிரித்தானியாவுக்கு துருக்கி அவசர உபகரணங்களை கொடுத்து உதவியுள்ளது.

அறுவைசிகிச்சை முகமூடிகள், எண் 95 கொண்ட மிகவும் பாதுகாப்பான முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு உடை என தனிப்பட்ட பாதுகாப்புப் பொருள்களைக் கொண்ட ஜெட் விமானம் ஒன்று துருக்கியின் அங்காராவிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் லண்டனில் தரையிறங்கியது.

துருக்கிய அனுப்பிய பாதுகாப்பு உபகரணங்களின் பெட்டியில், இருளுக்குப் பிறகு, மிகவும் பிரகாசமான சூரியன் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து, பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் இன்று தொலைபேசியில் துருக்கி வெளியுறவு மந்திரி Mevlüt Çavuşoğlu-க்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்த பொருட்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்பின் அறிகுறியாகும் என்று துருக்கி அரசு நடத்தும் அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

கடந்த வாரங்களில், துருக்கி சக NATO நட்பு நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற ஐந்து நாடுகளுக்கும் மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளது.

NHS-ல் சுமார் 10,000 வெண்டிலேட்டர்கள் உள்ளன, ஆனால் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் திறனை உறுதி செய்ய 18,000 தேவைப்படும் என்று கூறியிருந்த நிலையில், ஜேர்மன் இராணுவம் NHS-க்கு 60 வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்பதாகக் கூறியுள்ளது.

அதே போன்று, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட 200 வெண்டிலேட்டர்களை பிரித்தானியா கேட்டுள்ளது என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.