Header Ads



கர்தினால் மெல்கம் ரன்ஜித் அவர்களே, உங்களை ஒரு நாளும் மறக்க மாட்டேன் - ரிஸ்வி முப்தி


ஏப்ரல் 21 இல் அரங்கேறிய மிளேச்சத்தனமான தாக்குதலின் போது  கிறிஸ்தவ மக்களை நிதானப்படுத்தி அவர்களுக்கு அழகிய பல வழிகாட்டல்களை வழங்கி அச்சமூகத்தை நெறிப்படுத்திய இலங்கை கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் கௌரவ கர்தினால் மெல்கம் ரன்ஜித் அவர்களுக்கு நன்றி நவிழ்கின்றேன்.

என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ் ஷேஹ் ரிஸ்வி முப்தி அவர்கள் இன்று (10.04.2020) கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாயலில் ஆற்றிய விஷேட விழிப்புணர்வு உரையில் குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்ததாவது, அக்கோரச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் கிளர்ந்தெழாமலும் இவ்வீனச் செயலை முஸ்லீம்கள் என்ற போர்வையில் சில தீய சக்திகளால் தான் இது நடாத்தப்பட்டது என்றும் உண்மையை உரக்கச் சொல்லி கிறிஸ்தவ மக்களை மெல்கம் ரன்ஜித் அவர்களே சமாதானப்படுத்தினார்.

மேலும் அச் சந்தர்ப்பத்தில் அவர் எம்மோடு மிகவும் சினேகபூர்வமாக நடந்து கொண்டது மட்டுமல்லாது இலங்கை முஸ்லீம்கள் இவ்வாறு ஒரு நாளும் செயற்பட மாட்டார்கள் என  என்னிடம் உறுதியாக தெரிவித்தார்.

எனவே கர்தினால் மெல்கம் ரன்ஜித் அவர்களே!! உங்களது மகத்தான அச்செயற்பாடுகளை   இலங்கை வாழ்  முஸ்லீம்கள்  சார்பாகவும்  இன்றைய ஜும்மா தினத்திலும் நினைவு கூர்ந்து உங்களை பாராட்டுகின்றேன். இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்லாது முழு உலக மக்களும் உங்களை ஒருநாளும் மறக்கவே மாட்டார்கள். உங்களுக்கு முஸ்லீம் சமூகம் சார்பாக மீண்டும் வாழ்த்துக்கள் எனவும் விழித்துக் கூறினார்.

அத்தோடு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் தனது ஆறுதலையும் கவலையையும் உரையில் தெரிவித்தார்.

அத்தோடு கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் காத்திரமான நிகழ்ச்சித் திட்டங்களை வரவேற்பதோடு இதற்காக தங்களது உயிரையே பணயம் வைத்துப் பாடுபடும் முப்படை, பொலிஸ், வைத்தியர்கள், தாதிகள் மற்றும் சுகாதார திணைக்களத்தின் ஊழியர்கள் என அனைவருக்கும் முஸ்லீம் சமூகம் சார்பாக தனது ஆழ்ந்த நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்வுரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புரையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அரபாத் ஸைபுல்லாஹ் (ஹக்கானி)

3 comments:

  1. When was the above picture taken?
    None of them are obeying the Social distancing law.

    ReplyDelete
  2. @Mr. Jong Ayya, It was taken at the time of Our Leader Mufthi Riswi first met Hon. M. Ranjith; maybe even sometimes after it. Its not the issue. Muslim community must choose a leader ASAP. Situation is going waste from bad. Its the time educated Ulamas coupled with Muslim intellectual Muslim must involve in politics.

    ReplyDelete

Powered by Blogger.