Header Ads



கசிப்பு உற்பத்தி நிலையங்களை, சுற்றிவளைத்த கிராம மக்கள்


விசுவமடு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத மதுபானம் தயாரித்தலை,  கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து கிராம சேவகர் ஊடகவியலாளர்களை அழைத்து சென்று சட்டவிரோத  மதுபானம் உற்பத்தி செய்யும் இடத்தினை முற்றுகையிட்டு இரண்டு பெரல் கோடா  அழிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு கசிப்பு காச்ச தயாரன இடங்களில் உள்ள பொருட்களையும் அழித்துள்ளார்கள்.

விசுவமடு தொட்டியடி, குளத்தடி, கல்மடு காட்டுப்பகுதி, விசுவமடு குள காட்டு கரையோரங்களில் அதிகளவான கசிப்பு உற்பத்தி நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பில் பொலீசார் மற்றும் படையினருக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளின் ஆண் பெண்கள் என இணைந்து ஊடகவியலாளரையும் கிராமசேவையாளரையும் அழைத்து சென்றுள்ளார்கள்.

விசுவமடு குளத்தின் கரையோர காட்டுப்பகுதிகளில் இவ்வாறான சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவற்றை தேடி அழிக்கும் நடவடிக்கைக்கு சென்றபோது, குளத்தின் கரையோர காட்டுப்பகுதி ஒன்றில்  இரண்டு பெரல்களில் கசிப்பு காச்சப்பட்டு இருந்துள்ள நிலையில் அதில் இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளார்கள்.

இதன்போது இரண்டு பெரல்களையும் அழித்துதுள்ளார்கள் இதன்போது அருகில் கசிப்ப உற்பத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தடையங்கள் காணப்பட்டன (ஈஸ்ட்) வெதுப்பக சுவையூட்டி வெறும் பைக்கட்டுக்கள் அதிகளவில் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

1 comment:

  1. போலீசார் மற்றும் படையினருக்குத் தெரியப்படுத்தியும் அவர்கள் அதை செய்யவில்லை என்பதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கசிப்பு உற்பத்திக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்கது. பொதுமக்கள் இவ்வாறான செயற்றப்படுகளில் தொடர்ந்தும் கவனம் செலுத்தினால் கசிப்பு உற்பத்தியை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.