Header Ads



இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் நிதி உதவி

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வரும் இச்சந்தர்ப்பத்தில் நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை தென்கிழக்கு   பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (வுயுளுநுரு) அங்கத்தவர்களின் பங்களிப்பினால்  1.6 மில்லியன் ரூபா நிதி திரட்டப்பட்டு அதன் மூலமான  நிவாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இப் பணியின் முதற்கட்ட நடவடிக்கையாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன்  (குருவுயு)  இணைந்து தேசிய மட்டத்திலான  உதவிப்  பணிகளை தொடருகின்ற அதேவேளை எமது பிராந்தியத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளை அடிப்படையாக வைத்து  உதவிகளையும், கொரோனா பாதுகாப்பு உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கும் குறித்த நிதியின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட உள்ளது. 

இந்த இக்கட்டான தருணத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரால்; வழங்கப்படும்  அறிவுறுத்தல்களை மிகக் கவனமாகப் பின்பற்றுவதுடன்,  எமக்கான இப்பணியில் அயராது ஈடுபடும்இ சுகாதார , பாதுகாப்பு மற்றும் நிருவாக  தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்பினையும் வழங்கி  நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து எம்மையும் எமது நாட்டு மக்களையும் இந்நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும்  வேண்டிக்கொள்கின்றோம்.               

அத்தோடு எமது நாட்டில் இருந்து இத் தீய கொரோனா வைரஸை  (ஊழுஏஐனு - 19) இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கும் மற்றும் இப்பணியில் இணைந்து செயற்படுகின்ற அனைத்து தரப்பினருக்கும் எமது பல்கலைக்கழக கல்வியியலாளர்களின்; சார்பாக நன்றிகளைத்   தெரிவிப்பதோடு,  இந் நிவாரணப்பணிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எமது சங்க செயற்பாட்டு குழுவினருக்கும், நிதி ரீதியான பங்களிப்பு செய்த  அங்கத்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இக்கொடிய  வைரஸின்  தாக்கத்தில் இருந்து விரைவாக மீண்டெழுந்து  எமது தாய் நாட்டைப் பாதுகாக்க  அனைத்து பேதங்களுக்கும் அப்பால்  நாம்  அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். அதுவே எம்மால் செய்யகூடிய மிகப் பெரிய பங்களிப்பாகவும் அமையும்.

செயலாளர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்;கம்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

No comments

Powered by Blogger.