Header Ads



மடவளை நகரின், தற்போதைய நிலவரம் (படங்கள்)

(JM.Hafeez)

சுமார் ஒருமாத காலத்தின் பின் ஊரடங்கு நிலைமை தளர்த்ப்பட்ட போதும் வத்தேகம பொலீஸ் பிரிவிலுள்ள மடவளை நகரில் பொது மக்கள் வழமை போன்றே நடமாடியதை அவதானிக்க முடிந்தது.(20.4.2020)

பொதுவாக கடைகள் எல்லாம் வழமைபோல் திறந்திருந்த போதும் பொது மக்கள் கொள்வனவில் ஆர்வம் காட்வில்லை. கடந்த காலங்களில் அவதானித்த கியூவரிசை முறைகள் எங்கும் காணப்பட வில்லை. ஆனால் பாதையில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது. இ.போ.ச பஸ் வண்டிகள் வழமையைவிடவும் சற்று அதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. காரணம் தூர சேவைகள் இடம் பெறாத காரணமாக அவ்வாறு குறுகிய தூர சேவைகள் பரவலாக இடம் பெற்றது. குறைந்தளவிலான தனியார் பஸ்வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. பொதுவாக சகலரும் முகக் கவசம் அணிந்திருந்த போதும் தனியார் பஸ்வண்டிகளில் சமூக இடைவெளி முறையாகப் பேணப்பட்டதாகத தெரிய வில்லை. 

பாமசி மற்றும் ஆயர்வேத மருந்துக்கடைகள் முற்றாக வழமை போல் இருந்தன. பாரிய சன நெறிசல்கள் இருக்கவில்லை. ஆங்காங்கே அங்காடி வர்த்தகர்களும் கூவி விற்போரும் சிறிய ரக வாகனங்களில்(பட்டா) பொருட்களை ஏற்றிக் கொண்டு விற்பனை செய்யும் நடமாடும் கூடங்களும் ஆங்காங்கே தரித்து நின்ற போதும் கொள்வனவு செய்யவதில் பாரிய அக்கறை செலுத்தியதை அவதானிக்க முடியவில்லை. 

கடைகளின் முன் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதையும் வாகன நெறிசல் அதிகமாக இருப்தையும்சில கடைகள் வெரிச்சேடிக்கிடப்பதையும் படங்களில் காதணலாம். 



No comments

Powered by Blogger.