Header Ads



முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதை, ஆளுங்கட்சி கூட்டத்தில் கடுமையாக எதிர்த்த அதாவுல்லா.

- Sivarjah Ramasamy - 

கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய வேண்டுமென்ற அரசின் முடிவை ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தில் கடுமையாக எதிர்த்தார் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லா.

இதனால் நேற்று -08- மாலை இடம்பெற்ற ஆளுங்கட்சிக் குழுக்கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

“சர்வதேச நியமங்களுக்கு விரோதமாக முஸ்லிம்களின் உடல்கள் கொரோனா வைரஸை காரணம் காட்டி எரிக்கப்படுகின்றன. அதனை அனுமதிக்க முடியாது.

அரசு இதனை நிறுத்தி கொரோனாவால் இறக்கும் உடல்களை அடக்கம் செய்ய முன்வரவேண்டும்” என்றார் அதாவுல்லா.

ஆனால் அதனை மறுத்த சுகாதார அமைச்சர் பவித்ரா , சட்டம் பொதுவானது என்றும் வேறு மதத்தவர்கள் கூட இப்படியான கோரிக்கையை முன்வைத்தாலும் அதனை அரசு ஏற்கவில்லையென கூறியதுடன் சட்டம் அனைவருக்கும் பொதுவானதென தெரிவித்துள்ளார்.

“ அப்படியானால் இனிமேல் தொற்றுக்குள்ளாகும் முஸ்லிம்கள் வெளியில் வர – வந்து சொல்ல அச்சப்படுவார்கள் ? அப்போது என்ன செய்வது ..?” என்று அப்போது கேள்வியெழுப்பியுள்ளார் அதாவுல்லா.

5 comments:

  1. நீங்கள் எதிர்த்தும் ஒரு பயனும் இல்லை. தெளிவான இனவாதம். எங்கள் சமூகம் சிந்திக்க இது நேரம். அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்

    ReplyDelete
  2. This a reward you are getting for your unconditional support to government

    ReplyDelete
  3. இவ்வளவு நாள் செத்தபாம்பாய் இருத்த அதா திடீரென்று படம் எடுத்தாராம். இனிமேலாவது அதா இந்த இனவாதிகளை புரிந்துகொண்டால் நல்லது

    ReplyDelete
  4. முஸ்லிம் என்றால் ஒற்றுமை என்று நிருபித்து காட்டி விட்டு முஸ்லிம்களுடைய பிரச்சனையில் தலையிடுங்கள்

    ReplyDelete
  5. ஒருசமூக தலைவன் தன் சமூகத்தின் உரிமைகள் மீறப்படும் தரணங்களில் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. எதிர்பை பதிவு செய்தல் அவசியம். அதாவுல்லா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.