Header Ads



கொரோனாவிற்கு மதச்சாயம் பூசி, சிக்கி கொண்ட சங்கிகள்:

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவினால் இலட்சக்கணக்கான இந்துக்களான வடமாநில ஏழை குடும்பத்தினர் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் உணவுக்கு வழியில்லாமல், வாழ வழியில்லாமல் பஞ்சத்தில் சாலைகளில் இறங்கி போராட்ட ஆரம்பித்ததன் எதிரொலி முதல் உபியில் ஏழை இந்து தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளித்து அசிங்கப்பட்ட கேவளம்வரை அனைத்தையும் திசை திருப்பவே "கொரோனா மதச்சாய பூசல்"

கொரோனாவைரஸ் முஸ்லீம்கள் மூலமாகதான் இந்தியா முழுவதும் பரவியது என்ற செய்தியை பட்டிதொட்டியெங்கும் பரவச்செய்து வடமாநிலத்தவர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் "பசியும்,பட்டினியுமாய் நடந்தே ஊரு திரும்பிய" செய்திகளை மறைத்தார்கள்.

கொரோனா பரவுதலை முஸ்லீம்கள் மீது போட்டு "ராமர் கோவில்" பூமி பூஜையை நடத்தி முடித்து ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்கினார்கள்.

கொரோனா பரவுதலை முஸ்லீம்கள் மீது திசை திருப்பி பாடகி "கனிகா கபூர்" மூலம் கொரோனா பரவிய பாஜகவின் முக்கிய புள்ளிகள் தனிமைபடுத்தி வைத்திருப்பதை மறைத்துள்ளார்கள்.

பழியை முஸலீம்கள் மீது திசை திருப்பி "அனில் அம்பானியின்" YES BANK கடன் 12500 கோடியை முழுசாக மறைத்துள்ளார்கள்.

பழியை முஸ்லீம்கள் மீது திசை திருப்பி "பிப்ரவரி-20 அன்றே ராகுல் காந்தி எச்சரித்த கொரோனா பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வை" மோடி கண்டுகொள்ளாமல் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விமர்சனங்களை மறைத்துள்ளார்கள்.

மார்ச்-22 ஊரடங்கு உத்தரவின்போது மாலை 5மணிக்கு மேல் வடஇந்திய மக்கள் செய்த முட்டாள்தனங்ளை யுனஸ்கோ முதல் உலக நாடுகள்வரை இந்திய வரலாற்றிலயே இதுதான் மிக மோசமான முட்டாள்தனமான செயல் என்று காரி துப்பியதையும், ஊரடங்கு படுதோல்வியடைந்ததையும் மறைத்துள்ளார்கள்.

இவை அத்தனையையும் மறைக்கவே இந்த மதச்சாய பூசல்...

உலகம் கொரோனா பரவலை எவ்வாறு தடுப்பது என்று பல்வேறு கட்டங்களை கடந்து சென்று கொண்டிருக்கும்போது! கொரோனாவிற்கு மதசாயத்தை பூசி கேவளமன அரசியல் செய்யக்கூடியவர்கள் நாங்கள் என்று நிருப்பித்துள்ளார்கள்.

உண்மையில் முஸ்லீம்கள் ஒன்று கூடியதால்தான் இந்தியாவில் கொரோனா பரவியது என்றால் அதைவிட அதிகம் கூடிய கூட்டத்தை எங்களால் காட்ட முடியும்???

பிப்ரவரி-24 குஜராத்தில் டிரம்ப் கலந்து கொண்ட "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சியில் 2 இலட்சம் பேர் ஒரே இடத்தில் ஒன்று கூடினார்கள்.

பிப்ரவரி-21 கோவையில் "ஜக்கியின் சிவராத்திரியில்" 10இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள்.

இந்தியா முழுவதும் இன்னும் ஏராளமான மக்கள் திரள் கூடிய இடங்களின் பட்டியல் உண்டு இவர்கள் அனைவரையும் இந்த பார்வைதான் பார்த்தீர்களா??

வெறும் 2000 பேர் கூடிய கூட்டத்தை வைத்து மதச்சாயம் பூசி அரசியல் செய்ய நினைத்தீர்கள்!
ஆனால் உங்கள் திட்டமோ! தவுடுபொடியாகிவிட்டது...

குஜராத் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சியாக இருக்கட்டும் கோவை "ஈஷா சிவராத்திரியாக" இருக்கட்டும் இந்த இரண்டு இடங்களில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களை பற்றி இந்திய மக்கள் இப்பொழுதுதான் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள்!

இன்று உலகளவில் கொரோனாவால் பெரியளவில் பாதிக்கப்பட்ட நாடுகளான சைனா,அமெரிக்கா,இத்தாலி,ஸ்பெயின்,ஜெர்மனி,ஃப்ரான்ஸ் ஆகிய நாட்டினர்தான் அதிகம் இந்த 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

அ.மன்சூர் வேலூர்


3 comments:

  1. உலகிலேயே மிகவும் கேவலமான அரசியல் நடைபெறும் நாடு இந்தியாதான். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று - இந்திய மக்களுல் மிகவும் பெரும்பான்மையினர் கல்வியறிவற்ற கீழ்மட்ட மக்கள் இரண்டு - அவரகளுல் பெரும்பான்மையினர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர்கள்.

    ReplyDelete
  2. Bro Suhood. 👌👌👌👌

    ReplyDelete
  3. இந்தியாவை சொல்வதற்கு முன் உலக முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் கல்வியறிவற்றவர்கள் மற்றும் நாகரீகமற்றவ்ர்கள் .இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் 91.7 ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில் 74.5% ஆப்கானிஸ்தானில் 47.0%.

    ReplyDelete

Powered by Blogger.