Header Ads



வாகனங்களின் விலைகள், பாரியளவில் உயர்வடையும்

வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயர்வடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி நெருக்கடி நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இறக்குமதிக்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயர்வடையும் எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர் ஒன்றியத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் வாகனங்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கக் கூடிய சாத்தியங்களே அதிகம் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் சுசுகீ வெகன் ஆர், டொயாடா விட்ஸ், ஹொன்ட வெஸல், டொயோடா ஒக்ஸியோ போன்ற வாகனங்கள் இரண்டு முதல் மூன்று லட்சங்கள் வரையில் விலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு இரண்டு மூன்று மாதங்களில் வாகனங்களுக்கான கேள்வி நிலவக் கூடும் என்ற போதிலும் கையிருப்பில் போதியளவு வாகனங்கள் இல்லை என இந்திக்க சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் வாகனங்களுக்கு எவ்வளவு கேள்வி நிலவும் என்பது சந்தேகமே என்ற போதிலும், தற்போதைய சூழ்நிலையில் சொந்த வாகனம் ஒன்றை வைத்திருக்க பலரும் விரும்பக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.