Header Ads



தேர்தலை பிற்போடத் தேவையில்லை - அமைச்சர் சந்ரசேன

(இராஜதுரை ஹஷான்)

சுகாதார பிரிவினரது ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம் செயற்படுகின்றது.பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

பொதுத்தேர்தல் எப்போது நடந்தாலும் பெரும்பாலான மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்பார்கள். என சுற்றாடற்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்கள் பயனுடையதாக காணப்படுகின்றது.

பொதுத்தேர்தலை எந்நேரத்தில் நடதரதினாலும் தேர்தலை எதிர்க்கொள்ள தயாராகவே உள்ளோம். தேர்தலை கண்டு அஞ்சுவதற்கான அவசியம் கிடையாது.

பொதுத்தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் தயக்கம் கொள்வதாக எதிர்தரப்பினர் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

சுகாதார சேவை பிரிவின் ஆலோசனைக்கு அமையவே அரசாங்கம் செயற்படுகின்றது.தேர்தலை நடத்துவதற்கான தருணம் இது கிடையாது. என அறிவுறுத்தப்பட்டதால் தேர்தலுக்கான செயற்பாடுகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவல் முதலில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுத்தேர்தல் நடத்தப்படும்.

பொதுத்தேர்தல் எப்போது இடம் பெற்றாலும் பெரும்பாலான மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தையே தோற்றுவிப்பார்கள் என்றார்.

1 comment:

  1. ஆம் தேர்தலை நடத்தலாம் ஆனால் கொரோனா என மக்களை,நாட்டை முடக்கலாம்.ஆனால் முஸ்லிம்களின் உடலை எரிக்கலாம்.ஆனால் தேர்தல் நடத்தும் போது மட்டும் கொரோனா பரவாது.சூப்பர் ஜோக்

    ReplyDelete

Powered by Blogger.