Header Ads



ஹிரு - தெரனைக்கு செய்தி தயாரிக்க வாய்ப்பு வழங்காமல், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்


பிரதேச செயலாளர்
பிரதேச செயலக அதிகாரிகள்
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ( MOH )
கிராம சேவகர்
பொது சுகாதர பரிசோதகர் ( PHI ) 
பொலிஸ் அதிகாரி
இந்த அதிகாரிகளின் சேவைகள் இந் நாட்களில் விலை மதிக்க முடியாதது.

வீடு வீடாகச் சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து செய்து கொடுப்பதுடன்,
ஒவ்வொரு ஊரில் உள்ள மக்கள் பற்றிய 
சரியான தகவல்களை அரசுக்கு ஒவ்வொரு நாளும் வழங்குதல்,
நோய்த்தொற்று இருக்கலாம் என்று சந்தேகிப்பவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தல், 
தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பதல் என்று,

இந்த நோய்த் தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கு குறித்த அதிகாரிகள் ஒவ்வொரு ஊரிலும் கடுமையாக உழைக்கிறார்கள்.

இந்த மாதிரி கிராமிய மட்டத்தில் இருந்து  சரியாக ஒருங்கிணைக்கப்படுவதால்தான் இலங்கையில் இந்த நோய்ப்பரம்பலை இந்தளவேனும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்துள்ளது.

எனவே உங்கள் வீடுகளுக்கு வரும் அரச அதிகாரிகளிடம் உண்மையான தகவல்களை மட்டும் வழங்குங்கள்

அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குங்கள்.

அந்த இடத்தில் ஹிருவுக்கும், தெரனைக்கும் ஒரு செய்தி தயாரிக்க வாய்ப்பை வழங்கிவிடாதீர்கள்.
வீடுகளிலேயே இருப்போம். 

அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

Safwan Basheer

2 comments:

  1. இனவாதிகளுக்கு video பண்ண அனுமதிக்க வேண்டாம்.. அவர்கள் ஊதிப் பெரிதாக்கிவிடுவார்கள்...

    ReplyDelete

Powered by Blogger.